திருடுவதற்காக மாடி ஏறிய இளைஞன் தலையில் அடிபட்டு உயிரிழந்த சம்பவமானது மயிலாடுதுறையில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
கொள்ளையடிக்க மொட்டை மாடி டூ மொட்டை மாடி ஜம்ப்! தலைகுப்புற விழுந்து திருடன் பரலோகம் போன பரிதாபம்!

மயிலாடுதுறையில் சித்தர்காடு எனுமிடம் அமைந்துள்ளது. இப்பகுதிக்கு உட்பட்ட பனந்தோப்பு தெருவை சேர்ந்தவர் மணிகண்டன். இவனுடைய பட்டப்பெயர் ஸ்டாண்ட் மணி. அப்பகுதியில் உள்ள சின்ன சின்ன திருட்டு வழக்குகள் மணிகண்டன் மீது காவல் நிலையமும் உள்ளன.
பனந்தோப்பு தெருவிற்கு அருகில் காமராஜர் தெரு அமைந்துள்ளது. காமராஜர் தெருவில் ராஜலட்சுமி என்பவர் வசித்துவருகிறார். இவருடைய வீட்டு மொட்டை மாடியிலிருந்து அருகில் உள்ள வீட்டிற்கு தாவ முயன்றார்.
15 அடி உயரத்தில் தாவ முயன்றபோது எதிர்பாராவிதமாக நிலைதடுமாறி கீழே விழுந்துள்ளார். கீழே விழுந்த அதிர்ச்சியில் அவருடைய தலையில் பலத்த காயங்கள் ஏற்பட்டுள்ளன.
சம்பவ இடத்திலேயே மணிகண்டன் உயிரிழந்துள்ளார். மணிகண்டன் உயிரிழந்ததை பார்த்த பொதுமக்கள் காவல் நிலையத்தில் தகவல் தெரிவித்தனர். சம்பவயிடத்திற்கு விரைந்து வந்த காவல்துறையினர் மணிகண்டனின் உடலை பிரேத பரிசோதனைக்காக அரசு பொது மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
வழக்கு பதிவு செய்துள்ள காவல்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த சம்பவமானது மயிலாடுதுறையில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.