ஹெச்.ராஜாவை வீட்டிற்கு சென்று நேரில் சந்தித்த மு.க.அழகிரி! காரணம் இதுதான்!

முன்னாள் மத்திய அமைச்சர் மு.க.அழகிரி, எச். ராஜாவை அவரது இல்லத்தில் சந்தித்துப் பேசிய சம்பவம் அரசியல் வட்டாரத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.


காரைக்குடியில் இருக்கும் பாரதிய ஜனதா கட்சியின் தேசிய செயலாளர் ஹெச். ராஜா இல்லத்திற்கு முன்னாள் மத்திய அமைச்சர் மு.க .அழகிரி நேற்றைய தினம் நேரில் சென்று அவரை சந்தித்து  பேசியுள்ளார்.இவர்களுடைய சந்திப்பு அரசியல் வட்டாரத்தில் சற்று பரபரப்பை உண்டாக்கியுள்ளது.

சந்திப்பிற்குபின் செய்தியாளர்களிடம் பேசிய மு.க.அழகிரி திடீர் சந்திப்பிற்கான நோக்கத்தை கூறினார் . அப்போது பேசிய அவர் ஹெச். ராஜா அவர்களின் இளைய மகள் திருமணத்திற்கு தன்னால் கலந்து கொள்ள முடியாது என்பதால் முன்கூட்டியே அவரை நேரில் சந்தித்து வாழ்த்து தெரிவித்த வந்ததாகவும் கூறினார்.

பின்னர் பேசிய மு.க. அழகிரி இடம் செய்தியாளர் ஒருவர் திமுக பொதுக்குழு பற்றிய கேள்வியை எழுப்பினார். அதற்கு பதில் அளித்த மு.க.அழகிரி திமுக பொதுக்குழு கூட்டத்தை பற்றி தமக்கு எதுவும் தெரியாது என்றும் தான் திமுகவில் இல்லை என்றும் கூறியது அங்கிருந்தவர்களை வியப்பில் ஆழ்த்தியது.