ஊரடங்கு நாளில் ஓட்டல் அறையில் உல்லாசம்..! கையும் களவுமாக சிக்கிய காதல் ஜோடி..! தலா 40முறை பிரம்பால் வெளுத்த அதிகாரிகள்! எங்கு தெரியுமா?

இந்தோனேசியா நாட்டில் ஊரடங்கு உத்தரவை மீறி ஓட்டலில் உல்லாசம் அனுபவித்த ஜோடிக்கு வழங்கப்பட்ட தண்டனை சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.


உலகம் முழுவதிலும் கொரோனா வைரஸ் பாதிப்பு அதிகரித்து வருகிறது. இந்தோனேசியா நாட்டிலும் இந்த வைரஸ் பாதிப்பு கொஞ்சம் கொஞ்சமாக அதிகரித்து வருவதால், அந்த அரசாங்கத்தினால் பகுதிநேர ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளது. இந்தோனேசியா நாட்டில் ஏஸ் என்ற நகரம் அமைந்துள்ளது. 

இந்த நகரில் சமூக குற்றங்களில் ஈடுபடும் நபர்களுக்கு பொதுமக்கள் முன்னிலையில் கடுமையான தண்டனை வழங்கப்படுவது வழக்கமாகும். இந்த நகரிலும் பகுதிநேர ஊரடங்கு அமல்படுத்தப்பட்டது. இந்நிலையில் இந்த ஊரடங்கு உத்தரவையும் மீறி திருமணமாகாத காதல் ஜோடி ஒன்று ஒரு ஓட்டலில் தனியாக அறை எடுத்து உல்லாசம் அனுபவித்து வந்துள்ளனர்.

இதனை அறிந்துகொண்ட துப்பறியும் அதிகாரி, சம்மந்தப்பட்ட ஓட்டலுக்கு சென்று ரெய்டு நடத்தினார். அப்போது அந்த காதல் ஜோடியை அதிகாரி கையும் களவுமாக பிடித்தார். மேலும் அதே ஓட்டலில் அத்துமீறி மது அருந்தி கொண்டிருந்த 4 பேரையும் அந்த அதிகாரிகள் கையும் களவுமாக பிடித்தார்.

இரு பிரிவினருக்கும் பொதுமக்களின் முன்னிலையில் 40 பிரம்படிகளை காவல்துறையினர் தண்டனையாக நிறைவேற்றினர். வழக்கமாக இது போன்ற தண்டனைகளை நூற்றுக்கும் மேற்பட்டோர் பார்ப்பது வழக்கமாகும். ஆனால் வைரஸ் காலத்தில் 10 முதல் 15 பேர் மட்டுமே இதனை பார்த்தனர். அவர்களும் சமூக இடைவெளியை கடைபிடித்து முகக்கவசங்களை அணிந்தே  வேடிக்கை பார்த்தனர்.

இந்த சம்பவமானது அந்நாட்டில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.