புதுப்பீர் கடவு ஒன்றியத்தில் போட்டியிட்ட பெண் வேட்பாளர்கள் இருவரும் சரிசமமாக ஒரே எண்ணிக்கையில் வாக்குகளைப்பெற்று இருந்தபோது கடைசி வாக்கு சீட்டு அந்த தொகுதி வேட்பாளரின் வெற்றியை தீர்மானித்தது.
ரெண்டு பேருக்குமே சமமாக 85 ஓட்டுகள்..! கடைசி வாக்குச் சீட்டில் காத்திருந்த பேரதிர்ச்சி..! ஈரோடு பரபரப்பு!

ஈரோடு மாவட்டம், சத்தியமங்கலம் யூனியனில் அமைந்துள்ள புதுப்பீர்கடவு பஞ்சாயத்தில் உள்ள 3-வது வார்டில் மொத்தம் 416 வாக்குகள் உள்ளது. இந்த வார்டில் மொத்தம் நான்கு வேட்பாளர்கள் தேர்தலில் பங்கேற்றனர். ஆனால் 416 வாக்குகளில் வெறும் 326 வாக்குகள்தான் தேர்தலில் பதிவாகியுள்ளது.
பதிவான 326 வாக்குகளில் 32 ஓட்டுக்கள் செல்லாத ஓட்டுக்கள் என ஒதுக்கி வைக்கப்பட்டன. இந்த இடத்தில் போட்டியிட்ட நான்கு வேட்பாளர்களில் சுமதி, நதியா என்ற இரு பெண்களும் அடங்குவர். சுமதி சாவி சின்னத்திலும் நதியா கட்டில் சின்னத்திலும் போட்டியிட்டனர். இந்த வார்டு தேர்தலில் வாக்கு எண்ணிக்கை பெரும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியிருக்கிறது .
வாக்கு எண்ணிக்கையின் போது சுமதியும் நதியாவும் 85 வாக்குகளை சரிசமமாக பெற்றிருந்தனர் வாக்கு பட்டியலில் கடைசியாக ஒரே ஒரு வாக்குச் சீட்டு மீதமிருந்த இருக்கிறது. அந்த சீட்டு தான் இத்தகைய பரபரப்பு காரணமாக அமைந்து இருக்கிறது. ஏனெனில் அது ஒரு வாக்கு தான் இவர்கள் இருவரில் யார் வெற்றியாளர் என்பதை தீர்மானிக்கும் துருப்புச் சீட்டு.
அந்த வாக்கு அட்டையை பிரித்து பார்த்தபோது அதில் சாவி ஜென்மத்திற்கும் கட்டில் சின்னத்திற்க்கும் இடையில் வாக்கு ஆனது குத்தப்பட்டு இருந்தது. இதனால் யாருக்கான வாக்கு என்பதில் குழப்பம் ஏற்பட்டது. வேட்பாளர்களில் ஒருவரான சுமதி இரண்டு சின்னங்களுக்கும் இடையில் இந்த வாக்கு குத்தப்பட்டு இருக்கிறது. இதை கணக்கில் எடுத்துக் கொள்ளாமல் குலுக்கல் முறையில் வெற்றியாளர் யார் என்று தேர்வு செய்யுங்கள் என்று கூறியிருக்கிறார்.
ஆனால் அதிகாரிகளோ இது நதியாவின் சின்னத்திற்கு அருகில் இருப்பதால் அவர்தான் இந்த தேர்தலில் வெற்றியாளர் என்று அறிவித்திருக்கின்றனர். தன்னுடைய வெற்றியை குறித்து மரியாவிடம் கேட்டபொழுது கடைசிவரை நாங்கள் அனைவருமே பரபரப்பில் இருந்தோம் யார் ஜெயிச்சாலும் பரவாயில்லை மக்களுக்கு நல்லது செய்தால் போதும் என்று எண்ணினேன். ஆனால் கடைசி சீட்டு எனக்கு சாதகமாக அமைந்து இருப்பது மிகுந்த சந்தோஷத்தை அளிக்கிறது என்று அவர் கூறியது குறிப்பிடத்தக்கது.