களவாணி 2 படத்திற்கு மீண்டும் தடை! உயர்நீதிமன்றம் அதிரடி! அதிர்ச்சியில் ஓவியா!

நடிகர் விமல் மற்றும் நடிகை ஓவியா நடிப்பில் 2010 ல் வெளிவந்த களவாணி திரைப்படம் அமோக வெற்றி பெற்றது.


இயக்குனர் சற்குணம் இயக்கத்தில் வெளியான இந்த திரைப்படம் ரசிகர்களின்  அமோக வரவேற்பை பெற்றதை அடுத்து , இயக்குனர் சற்குணம் களவாணி படத்தின் 2ம் பாகத்தை இயக்கி வந்தார். இந்த மாதம் 5ம் தேதி  களவாணி 2 திரைப்படத்தை வெளியாகும் என எதிர்பார்க்கப்பட்டது . 

இந்நிலையில் அந்த திரைப்படத்தின் இணை தயாரிப்பாளர் ஜெயக்குமார் இயக்குனர் சற்குணம் தன்னிடம் 67 லட்சத்து 38 ஆயிரம் ரூபாய் கடனாக வாங்கி இருந்ததாகவும் ,மேலும் இந்த பணத்திற்கு  20 சதவீதம் வட்டி  பணத்தையும், பின்பு லாபத்தில் 20 சதவீதத்தையும் தருவதாக ஒப்பந்தத்தில் இயக்குனர் சற்குணம் படத்திற்கான ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டுள்ளார் எனவும் தெரிவித்துள்ளார் . 

ஆனால் அந்த  ஒப்பந்தத்தின்படி இயக்குனர் சற்குணம் படம் வெளியாவதற்கு ஒரு வாரத்திற்கு முன்பு குறிப்பிட்ட பணத்தை திரும்பத் தர வில்லை. இந்த காரணத்தினால் நீதிமன்றத்தில் இணை இயக்குனர் ஜெயக்குமார் களவாணி 2 படத்தை வெளியிட கூடாது என  வழக்கு தொடர்ந்திருந்தார் . இந்நிலையில் வழக்கை விசாரித்த நீதிபதிகள் களவாணி 2 படத்தை வெளியிட இடைக்கால தடை விதித்துள்ளனர் .

மேலும் இந்த வழக்கு தொடர்பாக இயக்குனர் சற்குணம் பதில் அளிக்கவும் நீதிபதிகள் உத்தரவிட்டுள்ளனர் . இதனால்  களவாணி 2  திரைப்படம் வெளியாவதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது . களவாணி 2 திரைப்படத்தில் பாகம் ஒன்றில் நடித்த விமல் மற்றும் ஓவியாவே  மீண்டும் நடிக்கிறார்கள் என்பது குறித்து குறிப்பிடத்தக்கது .