கொரோனா வைரஸ் தொற்று பரவாமல் இருக்க போடப்பட்டுள்ள ஊரடங்கு உத்தரவை அடுத்து இன்றைய தினம் முதல் அசாம் மற்றும் மேகாலயா ஆகிய மாநிலங்களில் மதுபான கடைகள் காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரை இயங்கும் என அறிவிப்பு வெளியாகியுள்ளது.
காலை 9மணி முதல் மாலை 4 மணி வரை மதுபானக் கடைகள் திறப்பு! அரசு திடீர் முடிவு!

உலகையே அச்சுறுத்தி வரும் கொரோனா வைரஸ் தாக்கம் பரவாமல் கட்டுப்படுத்த மத்திய அரசாங்கம் நாடு முழுவதும் ஊரடங்கு உத்தரவை பிறப்பித்துள்ளது. இதனால் மதுபான கடைகள் மூடப்பட்டிருந்தன. இந்நிலையில் அசாம் மற்றும் மேகாலயா மாநிலங்களில் இன்று முதல் மதுபான கடைகள் காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரை இயங்கும் என அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.
குறைந்தபட்ச ஊழியர்களுடன் இந்த மதுபான கடைகள் இயங்கும் எனவும் கூறப்படுகிறது. மேலும் முறையான வகையில் சானிடைசர்களை பயன்படுத்தவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது. அதாவது ஊழியர்கள் மது பாட்டில்களை கையாளும் போதும் பணத்தை கையாளும் போதும் சானிடைசர்களை பயன்படுத்த வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது.
அதேசமயம் பொதுமக்களும் சமூக இடைவெளியை பின்பற்றி தங்களுக்கு தேவையான மதுபாட்டில்களை பெற்றுக் கொள்ளலாம் எனவும் அம்மாநில அரசு கூறியிருக்கிறது. அதேபோல் மதுபான உற்பத்தி நிலையங்களும் திறக்கப்படும் எனவும் அரசு கூறியுள்ளது. மேலும் COVID-19 நோய்த்தொற்று இதுவரை மேகாலயா மாநிலத்தில் ஒருவருக்கு கூட இல்லை என்று அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது. இவற்றை அனைத்தையும் கருத்தில் கொண்டு மேகாலயா மற்றும் அசாம் ஆகிய மாநிலங்களில் மதுபான கடைகள் இயங்குவதற்கு அரசு அனுமதி வழங்கியுள்ளது.