கொரோனா எதிர்ப்பு போர்..! பிரசவமான உடலோடு கைக்குழந்தையையும் தூக்கிக் கொண்டு அலுவலகம் வந்த பெண் ஐஏஎஸ் அதிகாரி! நெகிழ்ச்சி சம்பவம்!

கைக்குழந்தையுடன் ஒரு ஐஏஎஸ் அதிகாரி கொரோனா தடுப்புப்பணியில் ஈடுபட்ட புகைப்படமானது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.


கடந்த சில வாரங்களாக உலகம் முழுவதையும் கொரோனா வைரஸ் ஆட்டிப்படைத்து வருகிறது. கிட்டத்தட்ட 1,14,000-க்கும் மேற்பட்டோர் இந்த வைரஸ் தாக்குதலினால் இதுவரை உயிரிழந்துள்ளனர். சீனா நாட்டில் தொடங்கி, இத்தாலி, அமெரிக்கா, பிரிட்டன், ஸ்பெயின், வடகொரியா, இந்தியா ஆகிய நாடுகளிலும் வேகமாக பரவ தொடங்கியுள்ளது.

இந்த நோயால் பாதிக்கப்பட்டவர்கள் தங்களுடைய கைகளை சுத்தம் செய்யாமல் பொருட்களை தொடுவதிலிருந்து வேகமாக பரவுவதாக கூறப்படுகிறது. 18,50,000-க்கும் மேற்பட்டோர் இந்த வைரஸால் தாக்கப்பட்டுள்ளதாக தெரியவந்துள்ளது.

இந்தியா முழுவதிலும் 8,447 பேருக்கு இந்த கொரோனா வைரஸ் தாக்குதல் ஏற்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. இதுவரை 765 பேர் குணமடைந்து இருப்பதாகவும், 273 பேர் உயிரிழந்திருப்பதாகவும் கூறப்படுகிறது. ஆந்திரா மாநிலத்தில் இதுவரை 350 பேருக்கு மேற்பட்டோர் இந்த நோய்த்தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளதாக தெரியவந்துள்ளது. 6 பேர் இதுவரை உயிரிழந்துள்ளதாக கூறப்படுகிறது.

விசாகப்பட்டினம் மாவட்டத்தை சேர்ந்த பெண் ஐஏஎஸ் அதிகாரி ஒருவர் பிறந்து 22 நாட்களேயான பெண் கைக்குழந்தையுடன் தடுப்பு பணியில் ஈடுபட்டுவரும் புகைப்படங்கள் சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது. இந்த அதிகாரியின் பெயர் ஸ்ரீஜனா. இவருடைய கணவர் ஒரு வழக்கறிஞர் ஆவார். இவருக்கு மார்ச் மாதம் இறுதியில் குழந்தை பிறந்துள்ளது. 

நாடு முழுவதும் இந்த காலகட்டத்தில் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டதால், மகப்பேறு விடுப்பு எடுக்காமல் கைக்குழந்தையுடன் தன்னுடைய அலுவலகத்தில் பணிபுரிந்து வருகிறார். இந்த புகைப்படங்களை பார்த்த பலரும் இவரது கடமை உணர்ச்சியை பாராட்டி வருகின்றனர்.

இந்த சம்பவமானது சமூகவலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.