21 வயசு நடிகையை தாய்லாந்தில் வைத்து கவிழ்த்த 38 வயசு ஆர்யா!

ஹிந்தியில் புகழ் வாய்ந்த குடும்ப வாரிசாக கருதப்படும் சாயிஷாவை தன்னுடைய காதல் வலையில் விழ வைத்திருக்கிறார் நடிகர் ஆர்யா. அவர் எப்படி மடக்கினாராம்..?


இந்திப் படவுலகின் பிரபலங்களான திலிப்குமார், சைராபானு குடும்ப வாரிசுதான் நடிகை  சாயிஷா. 2015ம் ஆண்டு தெலுங்குப் படமான அகில் மூலம் சினிமாவுலகில் நுழைந்தார். அடுத்து அஜய் தேவ்கன் நடித்த சிவாய் படத்தில் நடித்து இந்திய அளவில் பேசப்படும் நடிகையானார். மற்ற மொழிகளைவிட தமிழில் அவருக்கு அதிகமாகவே வரவேற்பு கிட்டியது. அதனால் ஜெயம் ரவியுடன் வனமகன் படத்தில் நடித்தார்.

பொதுவாக நடிகையின் முதல் படம் சரியாகப் போகவில்லை என்றால், அவரை தொடர்ந்து நடிக்கவைக்க மாட்டார்கள். ஆனால், சாயிஷாவின் டான்ஸ் மற்றும் நடிப்புத்திறன் காரணமாக தொடர்ந்து கடைக்குட்டி சிங்கம், ஜூங்கா, கஜினிகாந்த் போன்ற படங்கள் தேடிவந்தன. அவரும் அத்தனை படங்களிலும் தன்னுடைய மேனியழகையும், நடனத்திறமையையும் காட்டினார். நல்ல வரவேற்பு இருந்தாலும் திடீரென காணாமல் போய்விட்டார்.

தற்போது காப்பான் என்ற படத்தில் மட்டுமே நடித்துவருகிறார். என்னாச்சு என்று விசாரித்தபோதுதான் தமிழ் சினிமாவின் புதிய ஜொள்ளு மன்னன் ஆர்யா, தன்னுடைய வழக்கமான பந்தாக்களை காட்டி சாயிஷாவை உஷார் செய்துவிட்டாராம். கஜினிகாந்த் படப்படிப்பின்போதே, சாயிஷாவின் மனதைக் கவர்ந்துவிட்டாராம். மிகப்பெரிய குடும்பம், ஒரே மதம் என்பதெல்லாம் ஆர்யாவை ரொம்பவே இம்ப்ரஸ் செய்துவிட, அவரும் சாயிஷாவின் மனதைத் திருடி விட்டார்.

அதனால்தான் கஜினிகாந்த் படப்பிடிப்பு நடந்தபோதே, ‘அன்பும் பண்பும் கவனிப்புகுணமும் கொண்ட ஒரு நல்லவருடன் நடித்துவருகிறேன்” என்று கூறியிருந்தார் சாயிஷா. கஜினிகாந்த் படத்துக்காக தாய்லாந்து சென்றபோதே சாயிஷாவை கவிழ்த்துவிட்டாராம். ஆர்யாவின் பிளேபாய் சமாச்சாரங்கள் எதுவுமே தெரியாத சாயிஷாவும் காதலில் விழுந்துவிட்டார். ஆர்யாவை தன்னுடைய வீட்டிலும் அறிமுகப்படுத்தியுள்ளாராம்.

மதராஸப்பட்டினம், ராஜா ராணி தவிர ஆர்யாவுக்கு உருப்படியான படங்கள் எதுவுமே இல்லை. அதனால் நயன் தாராவை ரொம்பவே இம்ப்ரஸ் செய்ய முயன்று ஏமாந்து போனார்.  அதன்பிறகு எங்க வீட்டு மாப்பிள்ளை மூலமாகத்தான் தமிழ் சினிமாவுக்கு மீண்டும் திரும்பிவந்தார் என்று சொல்லவேண்டும். அந்த தொலைக்காட்சி நிகழ்ச்சியில் திருமணம் செய்துகொள்கிறேன் என்று சில பெண்களை நிகழ்ச்சிக்குப் பிறகும் சந்தித்து ஏமாற்றியதாக குற்றச்சாட்டு எழுந்துவந்தது.

இந்த நிலையில்தான் சாயிஷா விவகாரம் வெளியே வந்திருக்கிறது. அவரை ஒரு படத்துக்கு புக் செய்யச் சென்றபோதுதான் இந்தத் தகவல் தெரிய வந்திருக்கிறது. ஆர்யா நாயகன் என்றால் நடிக்கிறேன், இல்லையென்றால் வேண்டாம் என்று சாயிஷா சொல்லியிருக்கிறார். மேலும் ஆர்யாவுக்கு நாயகன் வாய்ப்பு கொடுத்தால், நான் என்னுடைய சம்பளத்தைக் குறைத்துக்கொள்கிறேன் என்றும் சாயிஷா வாய்ப்பு தேடினாராம்.

ஆர்யாவுக்கு மிகவும் எதிர்பார்க்கப்பட்ட கஜினிகாந்த் படமே ஓடவில்லை, இனியும் அவரை வைத்து ரிஸ்க் எடுக்க நாங்கள் தயாரில்லை என்று தயாரிப்பாளர் ஓடியேவிட்டாராம். ஆனாலும் ஆர்யாவுக்காக சாயிஷா இப்போதும் வாய்ப்பு தேடி வருகிறாராம்.