தீபாவளி பண்டிகை உருவான வரலாறு !

மனிதர்களின் வாழ்வில் இருக்கும் இருளை நீக்கி ஒளியை தருவதற்காக கொண்டாடப்படும் பண்டிகை தான் தீபாவளி.


நம்முடைய இதிகாசங்களின் படி, மாயோன் என்பவரின் இரு மனைவிகளில் பூமாதேவிக்கு பிறந்த மகனின் பெயர் நரகாசுரன் . அந்தக் காலகட்டத்தில் கிருஷ்ணபகவான் பன்றி அவதாரம் எடுத்திருந்தார். அந்த நரகாசுரன் கடும் தவம் புரிந்து வரம் ஒன்றை பெற்றிருந்தான் . அதாவது தன்னுடைய இறப்பிற்கு காரணம் தன் அன்னையாக மட்டுமே இருக்கமுடியும். தன் அன்னையின் கைகளால் மட்டும் தான் தன்னை கொள்ள முடியும் என்ற வரம் தான் அது. இந்த வரத்தைப் பெற்ற நரகாசுரன் மிகுந்த ஆணவத்தில் சுற்றித் திரிந்தான். இவனுடைய ஆணவத்தால் ரிஷிகளும் முனிகளும் மிகுந்த துன்பத்திற்கு ஆளாகினர். இவை அனைத்தையும் நிறுத்துவதற்கு ஆகவே கிருஷ்ண பகவான் நரகாசுரனை கொள்ள முடிவு செய்தார். 

இதற்கான திருவிளையாடலில் ஈடுபட்டார் கிருஷ்ணபரமாத்மா. நரகாசுரன் உடன் போரிட முடிவு செய்தார். அந்தப் போரில் நரகாசுரன் தம்மீது அன்பு எய்திய போது மயக்கமடைந்து கீழே விழுவது போல் நடித்தார் கிருஷ்ணர். அதனைப் பார்த்த பூமாதேவி கடும் சினம் கொண்டு கிருஷ்ண பரமாத்மாவை கொல்ல நினைத்த தன் மகன் என்று அறிந்திராத நரகாசூரனை அம்பு எய்தி கொன்றார். தன் அன்னையின் அம்புக்கு பலியாகி உயிரிழந்தான் நரகாசுரன். அப்போதுதான் அசுரனுக்கு பூமாதேவி தான் தன்னுடைய தாயார் என்று தெரிந்தது. உயிர் போகும் அந்தக் கடைசி நொடியில் நரகாசுரன் தன் அம்மாவை பார்த்து அம்மா இந்நாளை மக்கள் மனதில் நிறுத்தி வைக்க வேண்டும் . அவர்கள் அனைவரும் இந்நாளை சந்தோஷமாக இனிப்பு வழங்கி வெடி போட்டு கொண்டாட வேண்டும் என்று கூறினார் . இதனைக் கேட்ட கிருஷ்ணர் மற்றும் பூமாதேவி இணைந்து நரகாசுரனுக்கு அவன் கேட்ட வரத்தை வழங்கினர். நரகாசுரன் உயிரிழந்த அந்த நாளையே நாம் தீபாவளியாகக் கொண்டாடுகிறோம்.