வெறும் சுடிதாரை மட்டும் போட்டுக் கொண்டு ஜில்லா கலெக்டர் செய்த செம வேலை! வைரல் வீடியோ!

பெண் கலெக்டர் ஒருவர் வாக்குப்பதிவு இயந்திரங்களை எடுத்துச் செல்ல உதவும் வீடியோ,சமூக வலைத்தளங்களில் வெளியாகி அனைவரின் வரவேற்பை பெற்றுள்ளது.


நம் நாட்டின் 17-வது மக்களவை தேர்தல் ஏழு கட்டங்களாக நடைப்பேற்று வருகிறது. இரண்டு கட்டங்கள் முடிவடைந்தது குறிப்பிடத்தக்கது. தமிழகத்தில் 18-ஆம் தேதியன்று தேர்தல் நடந்து முடிந்தது.  மூன்றாம் கட்ட தேர்தலானது நாளை (ஏப்ரல் 23) கேரளா உள்ளிட்ட பல மாநிலங்களில் நடைபெற இருக்கிறது.நாளை தேர்தல் நடைபெறப்போகும் மாநிலங்களில் நேற்று மாலையுடன் பிரசாரம் ஓய்ந்தது. மாவட்ட தேர்தல் அலுவலர்கள் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டு வருகிறார்கள். இறுதி கட்ட பணிகளை மிகவும் கவனத்துடன் நிறைவேற்றி வருகின்றனர்.

அனுபமா என்றவர், கேரள மாநிலத்தில் உள்ள திரிச்சூர் மாவட்ட ஆட்சித்தலைவராக பணியாற்றி வருகிறார்.வாக்குப்பதிவு இயந்திரங்களை லாரியிலிருந்து பாதுகாப்புடன் இறக்கி வைக்கும் பணிகளில், அதிகாரிகளும் காவல்துறையினரும் ஈடுபட்டுக்கொண்டிருந்தனர்.

இறுதி கட்ட வேலைகளை கண்காணித்து வந்த அனுபமா,காவலர் ஒருவர் வாக்குப்பதிவு இயந்திரத்தை இறக்குவதற்கு மற்றொருவருக்காக காத்துக் கொண்டிருந்ததை பார்த்தார்.உடனே, சற்றும் யோசிக்காமல் ஒரு கை பிடித்துப் பெட்டியை உள்ளே கொண்டு சென்றார்

இதைக்கண்ட அதிகாரிகள் பதறியடித்து கொண்டு உதவ வந்தனர். அவர்களை வேண்டாம் என தனது சைகையால் தடுத்து விட்டார்.இந்நிகழ்வை ஊழியர் ஒருவர் வீடியோ எடுத்து சமூக வலைத்தளங்களில் upload செய்தார். அது தற்போது வைரலாகி வருகிறது.இது போன்ற இளம் அதிகாரிகள் வளர்வது ஜனநாயகத்தை தழைத்தோங்க வழி வகுக்கிறது என்று நெட்டிசன்கள் மனமகிழ்ந்து பாராட்டி வருகின்றனர்.