சேலம் எட்டு வழிச்சாலைக்கு நிலம் கையகப்படுத்த சென்னை உயர்நீதிமன்றம் விதித்திருந்த தடையை உச்சநீதிமன்றம் அகற்றி விட்டது. இதன் மூலம் எட்டுவழிச்சாலை திட்டத்திற்கு உச்சநீதிமன்றம் அனுமதியளித்துள்ளது என்பதுதான் உண்மை.
எட்டு வழிச்சாலை திட்டத்துக்கு அனுமதிதான் கிடைத்துள்ளதா…? விவசாயிகளின் சந்தோஷம் பொய்யா?

ஆனால், இந்திய தேசிய நெடுஞ்சாலை ஆணையம் உரிய விதிமுறைகள் எதனையும் பின்பற்றாமல் நிலங்களை அளவீடு செய்தும், கையகப்படுத்தியும் நிலங்களை உரிமை மாற்றம் செய்திருப்பதை உச்சநீதிமன்றம் ரத்து செய்துள்ளது. உரிய விதிமுறைகளைப் பின்பற்றி அதாவது சுற்றுச்சூழல் விதிகளை பின்பற்றி மீண்டும் முறைப்படி நிலங்களை கையகப்படுத்தலாம் என்பதுதான் உச்சநீதிமன்றத்தின் தீர்ப்பு.
இன்னும் சொன்னால் சென்னை உயர்நீதிமன்றத்தின் தீர்ப்பின் ஒரு பாதியை ஏற்றுக் கொண்டுள்ளது. நிலம் கையகப்படுத்த சென்னை உயர்நீதிமன்றம் விதித்திருந்த தடையை உச்சநீதிமன்றம் அகற்றி விட்டது. உரிய விதிமுறைகளுடன் நிலங்களை எடுக்கச் சொல்கிறது.மேலும் இத்திட்டம் தொடர்பாக ஏற்கனவே வெளியிட்ட அறிவிப்பாணையும் ரத்து இல்லை அதே அறிவிப்பாணையில் நிலங்களை மட்டும் உரிய விதிகளோடு கையகப்படுத்தி திட்டத்தை தொடரலாம் இதுதான் தீர்ப்பு.
ரத்து என்பதற்காக விவசாயிகள் கொண்டாவேண்டிய அவசியம் இல்லை என்பதுதான் உண்மை. ஆம், வருகிறது எட்டு வழிச்சாலை.