அதிமுக கூட்டணியில் ஜி.கே.வாசன் போட்டியிடும் தொகுதி அறிவிப்பு!

அதிமுக கூட்டணியில் ஜி.கே.வாசன் தான் போட்டியிடும் தொகுதியை அறிவித்துள்ளார்.


சென்னை ஆழ்வார்பேட்டையில் தமிழ் மாநில கட்சியின் தலைவர் ஜி.கே.வாசன் செய்தியாளர்களை சந்தித்தார், அப்போது பேசிய அவர் தமிழக மக்கள் நலன், தேசன் நலன் கருதி கூட்டணி அமைத்துள்ளதாகவும், இந்த கூட்டணி தமிழகம் மட்டுமல்லாமல் நாடு முழுவதும் வெற்றி பெறும் என்றார்.

அதிமுகவின் தலைமை தமிழக மக்கள் விரும்பக்கூடிய கூட்டணியை உருவாக்கி இருக்கிறது, இதனை பொறுத்துக் கொள்ளாமல் காங்கிரஸ் தரப்பினர் குற்றம் சாட்டி வருகின்றனர். எங்களின் வளர்ச்சியை பொறுத்து கொள்ள முடியாதவர்களுடன் நாங்கள் கூட்டணி அமைக்க விரும்பவில்லை.

இந்த கூட்டணி, சாதி, மத பேதங்களுக்கு அப்பற்றபட்டு நாட்டு நலன் மற்றும் இறையாண்மைக்கு முக்கியத்துவம் கொடுக்கும் வகையில் இந்த கூட்டணி அமைந்துள்ளது. தமாகா தேசிய நலனில் அக்கறை கொண்ட கட்சியாக தான் செயல்பட்டு வருகிறது.

இன்றைய அரசியல் சூழல், மக்கள் நலன் கருதி அனைவரும் பேசிய பின் இறுதியாக எண்ணிக்கை அடிப்படையில் என்பதை விட நல்ல எண்ணங்களின் அடிப்படையில் இந்த கூட்டணி அமைந்துள்ளது, இது பாரளுமன்றம் தொடங்கி பஞ்சாயத்து வரை வெற்றி பெறும்.

குறைகளை நிறையாக்க கூடிய ஆட்சியாக பாஜக திகழ்ந்து வருகிறது. அதிமுக தலைமையிலான கூட்டணி வெற்றிக்காக 39 தொகுதிகளுக்கும் செல்ல இருக்கிறோம். அதிகாரப்பூர்வமாக தஞ்சாவூர் தொகுதியில் போட்டியிட உள்ளோம், நாங்கள் கேட்ட தொகுதியையே எங்களுக்கு வழங்கி உள்ளனர்.

அந்த தொகுதியை சார்ந்த வேட்பாளரே அங்கு போட்டியிடுவார் அவரை உரிய தேதிக்குள் அறிவிப்போம் என்றார்.

இரட்டை இலை சின்னத்தில் போட்டியிடுவீர்களா என்ற கேள்விக்கு இரட்டை இலை சின்னத்தில் போட்டியிடவில்லை என்றும் சைக்கிள் சின்னம் கிடைத்தால் அதில் போட்டியிடுவோம் என ஞானதேசிகன் தெரிவித்துள்ளார்.

இந்நிலையில் மீண்டும் செய்தியாளர்களை சந்தித்த ஜி.கே வாசன் அதிமுக தேர்தல் குழுவிடம் எங்கள் விருப்பபட்ட தொகுதியை நாங்கள் தெரிவித்துள்ளோம், கூட்டணி கட்சிகளுடன் ஆலோசித்து தொகுதி பெயரை அதிமுக தலைமை அறிவிக்கும்.