டெல்லி: பிளாஸ்டிக் விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் போர்ன்ஹப் புதிய குறும்படம் ஒன்றை தயாரித்து, வெளியிட்டுள்ளது.
பிரபல ஆபாச இணையதளம் பார்ன்ஹப் வெளியிட்ட புத்தம் புதிய வீடியோ! உலகம் முழுவதும் இது தான் வைரல்!

ஆபாச படங்கள் பார்ப்பவர்களிடையே போர்ன்ஹப் இணையதளம் நல்ல பிரபலம். இந்த இணையதளம், கடலில் கொட்டப்படும் பிளாஸ்டிக் கழிவுகளால் ஏற்படும் பாதிப்பை உணர்த்தும் வகையிலும், பிளாஸ்டிக் பயன்பாடு பற்றி விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையிலும், புதிய படம் ஒன்றை தயாரித்து, வெளியிட்டுள்ளது.
அந்த குறும்படத்தின் ஆரம்பத்தில் பிளாஸ்டிக் நிறைந்த ஒரு கடற்கரை, அங்கு கடல்நீரில் அடித்து வரப்படும் பிளாஸ்டிக் கழிவுகள், இறந்து போன மீன்கள் உள்ளிட்ட பல்வேறு சுற்றுச்சூழல் பாதிப்புகளை, டாப் ஆங்கிளில் காட்டுகிறார்கள். அதன் பின்னணியில், ஆண், பெண் இருவரும் உல்லாசமாக இருப்பது போன்ற காட்சிகளும் இடம்பெற்றுள்ளன.
சுமார் ஒரு நிமிடம் ஓடும் இந்த குறும்படத்திற்கு, dirtiest porn ever எனப் பெயரிடப்பட்டுள்ளது. ஆபாச படங்கள் பார்ப்பவர்களின் எண்ணிக்கை அதிகமாக உள்ளதால், அவர்களிடையே எளிதில் பிளாஸ்டிக் தொடர்பான விழிப்புணர்வை ஏற்படுத்த முடியும். அதன் அடிப்படையில் இந்த குறும்படத்தை தயாரித்து வெளியிட்டுள்ளதாக, போர்ன்ஹப் குறிப்பிட்டுள்ளது.