காரில் இருந்து இறங்கிய தொழில் அதிபர்! நெருங்கிய இருவர்! பட்டப்பகலில் நிகழ்ந்த பகீர் துப்பாக்கிச்சூடு!

பிரபல தொழிலதிபர் சுட்டு கொல்லப்பட்டிருக்கும் சம்பவமானது உத்தரப்பிரதேச மாநிலத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.


உத்திரப்பிரதேச மாநிலத்தில் நொய்டா என்ற நகரம் அமைந்துள்ளது. நொய்டாவுக்கு உட்பட்ட கவுர் நகரில் அணில் சௌஹான் என்ற பிரபல தொழிலதிபர் வசித்து வந்தார். நேற்றிரவு இவர் தன்னுடைய காரில் வீட்டிற்கு வந்து கொண்டிருந்தார். வீட்டருகே சென்றவுடன் காரிலிருந்து அவர் இறங்கினார். அப்போது இருசக்கர வாகனத்தில் 2 மர்மநபர்கள் வேகமாக வந்து கொண்டிருந்தனர். ஒருவர் தன்னுடைய துப்பாக்கியை நாள் அணில் சௌஹானை சுட முயன்றார்.

ஆனால் அவருடைய குறி தப்பியது. இதைக் கண்ட அருகில் இருந்த மற்றொரு நபர் அவரை சுட முயற்சித்தார். ஆனால் அதற்குள் சௌஹான் கூச்சலிட பொதுமக்கள் நிறைந்து ஓடிவந்தனர். இதனால் பயந்துபோன மர்ம நபர்கள் அங்கிருந்து தப்பி ஓடிவிட்டனர்.

அதிர்ஷ்டவசமாக இந்த தாக்குதலில் அணில் சவுகானுக்கு எந்தவித காயமும் ஏற்படவில்லை. சம்பவம் அறிந்த காவல்துறையினர் அங்கு விரைந்து வந்தனர். அந்த இடத்தை சுற்றி பொருத்தப்பட்டிருந்த சிசிடிவி கேமரா பதிவுகளை கண்காணித்தனர். அதில் இந்த தாக்குதலில் ஈடுபட்ட இளைஞர்கள் தெளிவாக தெரிந்தனர்.

அப்பகுதி காவல்துறையினர் தனிப்படை அமைத்து இந்த தாக்குதலில் ஈடுபட்ட மர்ம நபர்களை தேடி வருகின்றனர். இந்த சம்பவமானது நொய்டாவில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.