பிரபல பெங்காலி நடிகை இயக்குனர் மீது பாலியல் ரீதியில் குற்றச்சாட்டியிருப்பது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
யாரும் இல்லாத போது அழைத்தார்..! பின்னழகை வருடினார்! டைரக்டரை பற்றி 39 வயது நடிகை வெளியிட்ட பகீர்!

அனைத்து திரையுலகிலும் பல்வேறு முன்னணி கதாநாயகர்கள் மற்றும் இயக்குநர்கள் மீது பல கதாநாயகிகள் தொடர்ந்து "மீ டு" புகார்களை குவித்த வண்ணம் உள்ளனர். சிலரின் புகார்களில் உண்மை இருப்பினும், பலர் வெறும் வெளிச்சத்திற்காகவே இதுபோன்ற புகார்களை தெரிவித்து வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.
பிரபல பெங்காலி இயக்குநரான அரிந்தம் செல் என்பவர் மீது நடிகை ரூபஞ்சனா மித்ரா "மீ டு" புகார் தெரிவித்துள்ளார். "அவருடைய அலுவலகத்திற்கு என்னை மாலை 5 மணிக்கு வரக்கூறினார். சென்றபோது அலுவலகத்தில் வேறு எவரும் இல்லை. இதனால் எனக்கு சற்று சந்தேகம் ஏற்பட்டது. உடனடியாக அவர் என்னை பிடித்து அழைத்து சென்றார். என் பின் பகுதியை வருடினார்.
அவருடைய ஆசைக்கு இணங்க மறுத்து போராடி கொண்டிருந்தேன். அப்போது அவருடைய மனைவி அலுவலகத்திற்கு வந்தார். அதன் பிறகு நான் அழுதுக்கொண்டே அலுவலகத்தில் இருந்து வெளியேறினேன்" என்று கண்ணீர் மல்க புகாரளித்துள்ளார். இந்த புகாரானது பெங்காலி திரை உலகில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.