பிரபல தென்னிந்திய கதாநாயகி தினமும் கதாநாயகர் ஒருவரின் வீட்டிற்கு சென்று வருவது கோலிவுட் திரையுலகில் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.
கல்யாணத்துக்கு அப்புறமும் தினமும் என் வீட்டுக்கு அந்த நடிகை வந்துவிடுகிறார்! ரகசியத்தை உடைத்த பிரபல நடிகர்!

நேரம், நையாண்டி, ராஜா ராணி முதலிய கோலிவுட் திரைப்படங்களிலும், மற்றும் சிலர் மலையாள திரைப்படங்களிலும் நடித்து தனக்கென ஒரு இடத்தை பிடித்தவர் நஸ்ரியா நஸ்ரின். இவருக்கு சில ஆண்டுகளுக்கு முன்னர் பகத் ஃபாசில் என்ற தொழிலதிபருடன் திருமணம் நடைபெற்றது. திருமணத்திற்கு பின்னர் நஸ்ரியா நடிப்பதை குறைத்து கொண்டுள்ளார். நீண்ட காலத்திற்கு பிறகு ஒரு மலையாள படத்தின் மூலம் தற்போது நடிப்பில் ரீஎன்ட்ரியாகி உள்ளார்.
மேலும் சமீபத்தில் அஜித் நடித்து வரும் "வலிமை" திரைப்படத்தில் நஸ்ரியா நடித்திருப்பதாக தகவல்கள் வெளியாயின. ஆனால் அவற்றை அவர் உடனே மறுத்துவிட்டார். இந்நிலையில் அவரை பற்றிய ஒரு செய்தி சமூக வலைத்தளங்களில் புயலாக பரவி வருகிறது. அதாவது நஸ்ரியா தினமும் நடிகர் துல்கர் சல்மானின் வீட்டிற்கு சென்று வருவதை வழக்கமாக கொண்டுள்ளார்.
இதுகுறித்து துல்கர் சல்மான் கூறுகையில், "குழந்தைகள் பிளே ஸ்கூலுக்கு போகும் அதே ஆர்வத்துடன் நஸ்ரியா தினமும் காலை என் வீட்டிற்கு வருவார். அவரை கணவர் பகத் ஃபாசிலே என் வீட்டில் விட்டு செல்வார். ஏனென்றால் என் மனைவியும், நஸ்ரியாவும் மிகவும் நெருக்கமான தோழிகள். சினிமாவுக்கு செல்வதென்றாலும், ஷாப்பிங் செல்வதென்றாலும் இருவரும் ஒன்றாகவே செல்வர்" என்று கூறினார்.
நஸ்ரியா கூறுகையில், "துல்கர் சல்மான் என்னுடைய அண்ணனை போன்றவர். நானும் அவருடைய மனைவியுமான அமல் சுபியாவும் மிகவும் நெருக்கமான தோழிகள். இருவரும் எங்கு சென்றாலும் ஒன்றாகவே செல்வோம்" என்று கூறியுள்ளார்.
இந்த செய்தியானது சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.