14வது மாடி! எங்கு இருந்து பார்த்தாலும் தெரியும்! ரூ.16 கோடிக்கு வீடு வாங்கிய தமன்னா!

கோலிவுட் மற்றும் தெலுங்கு திரையுலகில் புகழ்பெற்ற நடிகையான தமன்னா மும்பை கடற்கரையை ஒட்டிய பங்களா ஒன்றை இரு மடங்கு பணம் கொடுத்து வாங்கியிருப்பது திரையுலக வட்டாரத்தை பெரும் சர்ச்சையை கிளப்பியுள்ளது.


சமீபத்தில், நடிகை தமன்னா மும்பையில் கடற்கரையை ஒட்டிய அப்பார்ட்மென்ட் ஒன்றை ஒரு சதுர அடிக்கு இரு மடங்கு பணம் கொடுத்து வாங்கியுள்ளார்.அதாவது ஒரு சதுர அடிக்கு இவர் 80,778 ரூபாய் செலவு செய்துள்ளார். இவரின் வீட்டிற்கு 500 மீட்டர் தொலைவில் உள்ள இடத்தில் ஒரு சதுர அடிக்கு 40,000 ரூபாய் மட்டும்தான் நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

அவர் இந்த அபார்ட்மென்டை சமீர் போஜ்வானி என்ற கட்டிட உரிமையாளரிடம் இருந்து வாங்கியுள்ளார். இந்த கட்டடமானது மும்பை மேற்கு பகுதியில் உள்ள வெர்சோவா என்ற பகுதியில் அமைந்துள்ளது. 16 கோடி ரூபாய் விலை மதிப்பில் தமன்னா இந்த கட்டிடத்தை வாங்கியுள்ளார். பத்திரப்பதிவிற்க்கு அவர் ஒரு கோடி ரூபாய் செலவு செய்துள்ளார்.  இவருடைய வீடு 14-ஆம் மாடியில் அமைந்துள்ளது. அந்த ஃப்ளாட் ஆனது 22 மாடிகளை கொண்டதாகும். 

அந்த வீட்டின் பத்திரத்தில் விற்பனையாளர் சமீர் போஜ்வாணி என்றும் வாங்குபவர்கள் தமன்னா மற்றும் அவரது தாயார் என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது. தற்போது தமன்னா குடும்பத்தினர் லோகந்த்வாலா காம்ப்ளக்ஸில் வாழ்ந்து வருகின்றனர். புது வீட்டிற்கு 2 கோடி ரூபாய் செலவு செய்து உள்ளலங்காரம் செய்ய உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

கூடிய விரைவில் நடிகை தமன்னாவை அவருடைய புது வீட்டில் காணலாம் என்று ரசிகர்கள் சமூக வலைத்தளங்களில் கமெண்ட் செய்துள்ளனர்.