என்ஜினியரிங் படிப்பு முடித்த இளைஞர் மீன் வியாபாரம் செய்து வரும் நிலையானது கரூர் மாவட்டத்தில் ஏற்பட்டுள்ளது.
படித்தது என்ஜினியரிங்..! ஆனால் மீன் விற்பனையில் மாதம் ரூ.1 லட்சம் சம்பாதிக்கும் கரூர் இளைஞன்! எப்படி தெரியுமா?

கரூர் மாவட்டத்தில் கந்தா கிராமம் எனுமிடம் அமைந்துள்ளது. இங்கு மோகன் குமார் என்பவர் "கந்தா மீன் உணவகம்" என்ற உணவகத்தை இயக்கிவருகிறார். இந்த உணவகம் ஆனது தற்போது கரூர் மாவட்டம் முழுவதும் பிரபலமடைந்துள்ளது.
இவரை பற்றியும், இவருடைய உணவகத்தை பற்றியும் விவரங்களை சேகரிக்க முயன்றபோது பல ஆச்சரியங்கள் காத்திருந்தன. இவர் மெக்கானிக்கல் இன்ஜினியரிங் படித்தவர். முதன் முதலில் சென்னையில் ஒரு டிசைனிங் நிறுவனத்தில் 8,000 ரூபாய் சம்பளத்திற்கு பணியில் சேர்ந்துள்ளார். அதன்பின்னர் கரூரில் ஒரு பிரபல தனியார் கல்லூரியில் ஆசிரியராக பணியாற்றி வந்தார். மாதம் 15,000 ரூபாய் சம்பளத்துக்கு வேலை பார்த்து வந்தார். ஆனால் அதிக வேலையினால் இவருக்கு மன உளைச்சல் ஏற்பட்டுள்ளது. இதனால் அந்த வேலையை ராஜினாமா செய்தார்.
இவருடைய தந்தை நடத்திவந்த மீன் கடையில் தொடக்கத்தில் எந்தவித ஆர்வமுமில்லாமல் இருந்த இவர், அந்த கடையை இயக்குவது என்று முடிவெடுத்தார். இதற்கு இவருடைய பெற்றோர் சம்மதம் தெரிவிக்காத போதும், முழுமனதுடன் இந்த வேலையில் இறங்கினார். இவருடைய தந்தையிடமிருந்து மீன் தயாரிக்கும் வித்தியாசமான முறைகளை முறைப்படி கற்றுக்கொண்டார். இவருக்கு முன் மாதம் 30,000 ரூபாய் லாபத்தை இவருடைய தந்தை பெற்று வந்தார். இவர் வந்தவுடன் இன்னும் அதிகரித்தது.
சிக்கன் லெக் பீஸ், நண்டு சூப், சிக்கன் லாலிபாப் என்று வித்தியாசம் வித்தியாசமான உணவுகளை சுகாதாரமாக தயாரித்தார். வஞ்சிரம், இறால், நெத்திலி ஆகிய மீன்களையும் வித்தியாசமான முறையில் செய்து வாடிக்கையாளர்களை அள்ளி குவித்தார். மாதம் 50,000 ரூபாய் வரை லாபம் ஈட்டுகிறார்.
மேலும் தூத்துக்குடியிலுள்ள பிரபல உணவகங்களுக்கு பதப்படுத்தப்பட்ட மீன்கள், சிக்கன்கள் முதலியவற்றை சப்ளை செய்யும் தொழிலையும் மேற்கொண்டு வருகிறார். தொடக்கத்தில் கடினமாக இருந்தாலும், மிகுந்த முயற்சியோடு செயல்பட்டதால் இந்த தொழிலிலும் தற்போது 50,000 வரை லாபம் பார்க்கிறார்.
இவருடைய முயற்சிக்கு மென்மேலும் லாபங்கள் குறையும் என்று அப்பகுதி மக்கள் வாழ்த்துகின்றனர்.