சீனாவை பூர்வீகமாக கொண்ட லிச்சிப் பழம் இப்போது நம் நாட்டிலும் எளிதில் கிடைக்கிறது. சிவப்பு நிற விதைக்குள் வெள்ளை நிறத்தில் காணப்படும் லிச்சிப் பழத்தில் ஏராளமான ஊட்டச்சத்துக்கள் நிரம்பியுள்ளன..
லிச்சி பழம் தெரியுமா? எதுக்காக சாப்பிடணும்?

·
மலச்சிக்கலை
கட்டுப்படுத்தி குடலின்
தசைநார்களை சீராக
இயங்க வைக்கும்
தன்மை லிச்சிப் பழத்துக்கு உண்டு.
·
தினம் ஒரு லிச்சி
பழம் எடுத்துக்கொண்டால் இதயம்
நல்ல ஆரோக்கியத்துடன் வேலை
செய்யும். லிச்சி பழச்சாறு கல்லீரலுக்கு வலிமை சேர்க்கக்கூடியது.
·
லிச்சி
பழத்தில் வைட்டமின்
சி மற்றும்
ஆண்டியாக்ஸிடண்ட் இருப்பதால்
நோய் எதிர்ப்பு சக்தி அதிகரிக்கும். தொற்று நோய் ஏற்படாமல் தடுக்கும்.
·
இருமல்,
சளி, காய்ச்சல்,
போன்ற பொதுவான
நோய்களுக்கு எதிராக
போராடி உடலுக்கு
தேவையான பாதுகாப்பை
அளிக்கும் லிச்சி பழம், ரத்தத்திற்கு புத்துணர்வு ஊட்டவும் பயன்படுகிறது.