தீபாவளி பண்டிகையானது ஒரு பல்லின பண்பாட்டு விழாவாக உள்ளது.
சிட்னியில் கொண்டாடப்படும் பறை இசை உடன் கூடிய தீபாவளி பண்டிகை !!

தீபாவளி பண்டிகையை பல மதத்தினரும் பலவிதமாக கொண்டாடி வருகின்றனர். சொல்லப்போனால் இது மதங்களைத் தாண்டிய ஒரு விழாவாக பார்க்கப்படுகிறது. இந்திய நாட்டைப் போலவே வெளிநாடுகளிலும் தீபாவளி பண்டிகை கோலாகலமாக வருடம்தோறும் கொண்டாடப்படுகிறது. நம்முடைய தமிழர்கள் உலகெங்கும் நிரைந்துள்ளனர். ஆஸ்திரேலியாவில் அமைந்துள்ள சிட்னி நகரில் நம்முடைய தமிழ் மக்கள் பலரும் காலம் காலமாக வாழ்ந்து வருகின்றனர்.
சிட்னி நகரில் ஒவ்வொரு ஆண்டும் தீபாவளி பண்டிகையை ஒட்டி பல விழாக்கள் கொண்டாடப்பட்டு வருகிறது. அந்த வகையில் இந்த ஆண்டும் தமிழர்களின் பாரம்பரிய இசையான பறை இசையுடன் கொண்டாடப்பட்டுள்ளது. "இந்து கவுன்சில் ஆஃப் ஆஸ்திரேலியா" என்ற ஒரு அமைப்பு ஆண்டுதோறும் சிட்னி பெருநகரங்களில் தமிழர்களின் பண்பாட்டை நிலைநிறுத்தும் தீபாவளி பண்டிகையை கோலாகலமாக கொண்டாடி வருவது வழக்கம். எப்பொழுதுமே இந்த நிகழ்ச்சியின்போது தமிழர்களின் பாரம்பரிய இசை வாத்திய மழையுடன் கூடிய நடன நிகழ்ச்சிகள் இசை நிகழ்ச்சிகள் ஆகியவை நடத்தப்படும். அதேபோல் இந்த ஆண்டும் தமிழர்களின் பாரம்பரிய நிகழ்ச்சிகள் அனைத்தையும் வைத்து தீபாவளி கொண்டாடும் பண்டிகை கொண்டாடப்படுகிறது .
சிட்னியில் நடைபெறும் தீபாவளி பண்டிகை பற்றி அறிந்துகொள்வதற்கு , " இந்து கவுன்சில் ஆஃப் ஆஸ்திரேலியா" என்ற அமைப்பை சேர்ந்த சண்முகப்பிரியாவும் , தமிழர்களின் பாரம்பரிய இசையான பறையிசை கற்றுத்தரும் Sydney Tamil Performing Arts அமைப்பின் பைந்தளிர் என்பவரும் பேட்டி ஒன்றில் பேசுகையில் , கண்டம் தாண்டி இந்த தீபாவளி பண்டிகையை கொண்டாடுவதில் தாங்கள் மிகவும் மகிழ்ச்சி அடைவதாகவும் , தமிழரின் பண்பாட்டை நினைவுறுத்தும் வகையில் பறை இசை நிகழ்ச்சிகள் நடத்துவதன் மூலம் தமிழனாக மிகவும் பெருமை கொள்வதாகவும் கூறியிருந்தனர்.