பிரபல இயக்குனர் ஏ.எல் விஜய் மற்றும் அவரது இரண்டாவது மனைவி ஐஸ்வர்யா தம்பதியினருக்கு ஆண் குழந்தை பிறந்துள்ளது.
ஐஸ்வர்யாவை திருமணம் செய்த பத்தே மாதத்தில் தந்தையான 40 வயது ஏ.எல் விஜய்! அமலா பாலின் முன்னாள் கணவர் வாழ்வில் வசந்தம்!

கடந்த 2007 ஆம் ஆண்டு அஜித் நடிப்பில் வெளிவந்த கிரீடம் என்ற திரைப்படத்தை இயக்கி தமிழ் சினிமாவுக்கு அறிமுகமாகியவர் இயக்குனர் ஏ.எல் விஜய். அதன்பிறகு இவர் மதராச பட்டினம் என்ற திரைப்படத்தை இயக்கினார். இந்த இரண்டு திரைப்படங்களும் மிகப்பெரிய வெற்றி அடைந்ததால் இவர் குறுகிய காலத்திலேயே திரையுலகில் பிரபலமானார். அதன் பிறகு விக்ரம் கதாநாயகனாக நடித்த தெய்வத்திருமகள் என்ற திரைப்படத்தை இவர் இயக்கினார். இந்தத் திரைப்படமும் அவருக்கு மிகப்பெரிய வெற்றியைப் பெற்றுத் தந்தது. இவர் இயக்கிய தெய்வத்திருமகள் மற்றும் தலைவா போன்ற திரைப்படங்களில் நடிகை அமலாபால் நடித்திருந்தார்.
இதனால் இயக்குனர் ஏ எல் விஜய் மற்றும் நடிகை அமலாபாலுக்கு இடையே காதல் மலர்ந்தது. கடந்த 2014ஆம் ஆண்டு இவர்கள் இருவரும் திருமணம் செய்து கொண்டனர். சில வருடங்களிலேயே இவர்களுக்கு ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக இவர்கள் இருவரும் கடந்த 2017ம் ஆண்டு விவாகரத்து செய்து கொண்டனர். இதன் காரணமாக கடந்த வருடம் இயக்குனர் ஏ.எல் விஜய் ஐஸ்வர்யா என்ற பெண்ணை இரண்டாவதாக திருமணம் செய்து கொண்டார்.
இந்நிலையில் இயக்குனர் ஏ எல் விஜய் மற்றும் ஐஸ்வர்யா தம்பதியினருக்கு தற்போது ஆண் குழந்தை பிறந்துள்ளது. இதனால் இவர்களது குடும்பத்தினர் மிகவும் மகிழ்ச்சியில் ஆழ்ந்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது. இந்த செய்தி இணையத்தில் தீயாய் பரவி வருகிறது.