தமிழகம் தட்டித் தூக்கியது, டிஜிட்டல் இந்தியா 2020 விருது – தமிழகத்துக்கு குடியரசுத் தலைவர் அங்கீகாரம்

டிஜிட்டல் இந்தியா விருதுகள், புதுமையான டிஜிட்டல் தீர்வுகளை முன்னிறுத்தி அவற்றை அனைத்து அரசாங்க நிறுவனங்களும் பின்பற்றுவதை ஊக்குவிப்பதை நோக்கமாகக் கொண்டு, இந்திய தேசிய இணையத்தில் நிறுவப்பட்டுள்ளன.


 சுகாதாரம், தொழிலாளர், நிதி, சமூக நீதி மற்றும் சுற்றுச்சூழல் போன்ற துறைகளில் நீடித்த வளர்ச்சி இலக்குகளை அடையும் பொருட்டு, விரிவான டிஜிட்டல் தொழில்நுட்பங்களை உபயோகிப்பதில் முன்னோடி முயற்சிகளைக் கொண்டிருக்கும் மாநிலம் மற்றும் யூனியன் பிரதேசத்தினை இவ்விருதுகள் கௌரவிக்கின்றன.

நம்பிக்கை இணையம், செயற்கை நுண்ணறிவு, இயந்திர கற்றல், பல்பொருள் இணையம், இயற்கை மொழி செயலாக்கம், குரல் பயணர் இடைமுகம், பெரிய தரவு மற்றும் பகுப்பாய்வு, மெய்நிகர் உண்மை போன்ற வளர்ந்து வரும் தொழில்நுட்பங்களும் மதிப்பீடு செய்யப்படுகின்றன. 

இந்த ஆண்டு நமது தமிழ்நாடு மாநிலம் “டிஜிட்டல் ஆளுமையில் சிறந்த மாநிலம்” என்ற பிரிவில் “டிஜிட்டல் இந்தியா – 2020 தங்க விருதினைப்” பெற்றுள்ளது. இவ்விருது 30.12.2020 அன்று நடைபெற்ற டிஜிட்டல் இந்தியா – 2020 விருதுகள் மெய்நிகர் விழாவில் மாண்புமிகு இந்திய குடியரசுத் தலைவரால் வழங்கப்பட்டது.