திமுக தலைவர் மு க ஸ்டாலின் காடுவெட்டி குரு மகன் கனலரசனை இன்று சந்திக்கிறார்.
காடுவெட்டி குரு மகனை சந்திக்கிறார் மு க ஸ்டாலின்!

காடுவெட்டி குரு மறைவுக்குப் பிறகு அவரது மகன் கடலரசன் அவரது தாயார் மற்றும் காடுவெட்டி குருவின் சகோதரி மீனாட்சி ஆகியோர் பாமக நிறுவனர் ராமதாஸ் மற்றும் அன்புமணி மீது பல திடுக்கிடும் தகவல் களையும் புகார்களையும் கூறி வருகின்றனர்.
ராமதாஸ் மற்றும் அன்புமணி யால் தங்கள் உயிருக்கு அச்சுறுத்தல் இருப்பதாகவும் காடுவெட்டி குருவின் தாயும் மகனும் சொல்லி வருகின்றனர். இந்த நிலையில் நேற்று தமிழக வாழ்வுரிமைக் கட்சித் தலைவர் வேல்முருகன் முக ஸ்டாலினை சந்தித்து இடைத்தேர்தலில் ஆதரவு தெரிவித்தார்.
இதன் தொடர்ச்சியாக காடுவெட்டி குருவின் மகன் கனலரசன் என்று அண்ணா அறிவாலயத்தில் திமுக ஸ்டாலினை சந்தித்து தேர்தலில் திமுகவிற்கு ஆதரவு தெரிவித்துள்ளதாக கூறப்படுகிறது. அதுமட்டுமல்லாமல் வடமாவட்டங்களில் பாமக போட்டியிடும் 7 தொகுதிகளில் அந்தக் கட்சியின் வேட்பாளரை எதிர்த்து கனலரசன் பிரச்சாரம் செய்வதற்கும் திமுக ஏற்பாடு செய்துள்ளதாக கூறப்படுகிறது.
இதற்காகவே கனலரசன் என்ற மு க ஸ்டாலின் சந்திக்க உள்ளதாக சொல்கிறார்கள்.