வீடு வீடாக சென்று வாக்காளர்களுக்கு பணப் பட்டுவாடா! வேலூர் தொகுதியில் செம ஜோர்!

வேலூர் மாவட்டம் அரக்கோணம் அருகே திமுக வேட்பாளர் சார்பில் வாக்காளர்களுக்கு பணம் வழங்கிய காங்கிரஸ், திமுக பிரமுகர்கள் பிடிப்பட்டனர்.


சோளிங்கர் சட்டமன்ற தொகுதியின் தேர்தல் பறக்கும்படை அலுவலரும் ஆற்காடு வட்ட வழங்கல் அலுவலருமான பழனிராஜனுக்கு த நெமிலி அடுத்த மூலப்பட்டு கிராமத்தில் வாக்காளர்களுக்கு பணம் வினியோகிக்கப்படுவதாக ரகசிய தகவல் கிடைத்தது. இதனை அடுத்து அவர்கள் அங்கு சென்ற போது, காங்கிரஸ் பிரமுகரும் முன்னாள் நெமிலி பேரூராட்சி தலைவருமான வினோபா(62) மற்றும் திமுக பிரமுகர் ரமேஷ்(49) ஆகியோர் வாக்காளர்களுக்கு பணம் விநியோகித்துக் கொண்டிருந்தனர்.

இதனை அடுத்து அவர்கள் இருவரையும் தேர்தல் பறக்கும்படை அதிகாரி பழனிராஜன் தலைமையிலான குழுவினர் பிடித்து அவர்களிடமிருந்த வாக்காளர் பட்டியல் ரொக்கம் ரூ.2 லட்சத்து 4 ஆயிரத்து 500 ஐ பறிமுதல் செய்து நெமிலி வட்டாட்சியரிடம்  ஒப்படைத்து விசாரனை நடத்தி வருகின்றனர்கள். ரூ2 ஆயிரம் நோட்டுக்கள் 94, ரூ500 நோட்டுக்கள் 33, உள்ளிட்ட ரூ.2 லட்சத்து 4 ஆயிரத்து 500 ஐ பறிமுதல் செய்து நெமிலி வட்டாட்சியரிம் ஒப்படைத்தனர்.

இது குறித்து நெமிலி வட்டாட்சியர் அளித்த புகாரின் பேரில் நெமிலி காவல்துறையினர் விசாரனை நடத்தி வருகின்றனர்கள்.இதனை அடுத்து இந்த விவகாரத்தில் அடுத்து யாரிடம் விசாரணை நடைபெற உள்ளது என்கிற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.