சாலையோரத்திலிருந்த தடுப்புசுவர் மீது கார் மோதியதில் 5 பேர் உயிரிழந்த சம்பவமானது சென்னையில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
பிறந்தநாள் பார்ட்டி! அதிவேக கார்! தடுப்புச் சுவரில் மோதிய கோரம்! 5 மாணவர்களுக்கு நேர்ந்த பயங்கரம்!

சென்னையில் க்ரெசண்ட் கல்லூரி அமைந்துள்ளது. இந்த கல்லூரியில் அகமது பாஹிம் மற்றும் சைபுல்லா, முகமது முஷரப், முகமது சகிபுதின் ஆகியோர் பிறந்தநாளை கொண்டாடுவதற்காக ஈ.சி.ஆர். சென்றனர். அங்கு கொண்டாடிவிட்டு நேற்றிரவு காரில் திரும்பி கொண்டிருந்தனர்.
அப்போது இன்று அதிகாலையில் ஈஞ்சம்பாக்கம் அருகே வந்து கொண்டிருந்த போது சாலையோரத்தில் இருந்த தடுப்பு சுவரின் மீது வேகமாக மோதியுள்ளனர். இந்த விபத்தில் அப்துல் பாஹிம் மற்றும் முகமது சபின் ஆகியோர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர்.
மேலும், சைபுல்லா மற்றும் முகமது முஷரப் ஆகியோர் ராயப்பேட்டை மருத்துவமனைக்கு மேல் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர். இன்னும் பல நண்பர்கள் ராஜீவ்காந்தி அரசு பொது மருத்துவமனையில் அனுமதித்துள்ளனர்.
இந்த சம்பவமானது அடையாறில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. அடையாறு காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
இந்த சம்பவமானது சென்னையில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.