காதலனுடன் தகராறு ஏற்பட்டதால் பெண் ஒருவர் திடீரென ரயில்முன் பாய்ந்து தற்கொலை செய்து கொண்ட சோக சம்பவம் கோவையில் நடைபெற்றுள்ளது.
நீ கூப்டனு தான அடிக்கடி வந்தேன்..! இப்போ இப்படி சொல்ற..! காதலனுடன் உல்லாசமாக இருந்த காதலி எடுத்த பகீர் முடிவு!

கோவை பெரியநாயக்கன்பாளையத்தை சேர்ந்த கல்லூரி மாணவி கவுசிகாதேவியும் தனியார் பள்ளியில் பஸ் டிரைவர் ரமேசும் காதலித்து வந்துள்ளனர். காதலர்கள் பல இடங்களுக்கு சென்று அடிக்கடி உல்லாசமாக இருந்து வந்துள்ளனர். இந்த நிலையில் சில நாட்களுக்கு முன் இருவருக்கும் இடையே ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக சந்தித்து பேசாமல் இருந்துள்ளனர்.
இதற்கிடையே கவுசிகாதேவிக்கு போன் செய்து பேச வேண்டும் என அழைத்துள்ளார் பேருந்து ஓட்டுநர். இதையடுத்து கவுசிகா தேவி நேற்று அவரை சந்திப்பதற்காக சென்றார். பின்னர் அவர்கள் 2 பேரும் பெரியநாயக்கன்பாளையம் வீரபாண்டி பிரிவு அருகே இருவரும் பேசி கொண்டிருந்தபோது கடும் வாக்குவாதம் ஏற்பட்டது.
இதில் வாக்குவாதம் முற்ற மனமுடைந்த கவுசிகா தேவி அந்த பகுதியில் உள்ள ரெயில்வே தண்டவாளத்திற்கு சென்றார். அப்போது இரவு 8 மணியளவில் மேட்டுப்பாளையத்தில் இருந்து கோவைக்கு வந்த நீலகிரி எக்ஸ்பிரஸ் ரெயில் முன் பாய்ந்து தற்கொலை செய்தார். இதில் தூக்கி வீசப்பட்டு உடல் சிதறி சம்பவ இடத்திலேயே கவுசிகாதேவி பரிதாபமாக இறந்தார்.
இதுகுறித்து தகவல் அறிந்த ரெயில்வே போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து கவுசிகாதேவியின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக கோவை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இதுகுறித்து ரெயில்வே போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.