சிவராத்திரி கொண்டாட்டத்தின் போது ஈஷா யோகா மையத்தின் நிறுவனர் ஜக்கி வாசுதேவ் நடிகைகளுடன் போட்ட ஆட்டம் தான் தற்போது இந்திய அளவில் டால்க் ஆஃப் த டவுன் ஆக உள்ளது.
காஜலுக்கு கன்னத்தில் முத்தம்! தமன்னாவுடன் செம ஆட்டம்! சத்குருவின் சிவராத்திரி சேட்டைகள்!

வருடா வருடம் கோவை அருகே உள்ள வெள்ளியங்கிரியில் உள்ள தனது ஆசிரமத்தில் சிவராத்திரியை கோலாகலமாக கொண்டாடுவது சத்குருவின் வழக்கம். அதிலும் கடந்த 2 ஆண்டுகளாக சிவராத்திரியை சத்குரு மிக பிரமாண்டமாக கொண்டாடி வருகிறார்.
விடிய விடிய ஆட்டம், பாட்டம் கொண்டாட்டம் என்று ஈஷா யோகா மையம் தூள் பரத்துகிறது. அந்த வகையில் கடந்த வருடத்தை போலவே இந்த வருடமும் நடிகர், நடிகைகள் பலர் சிவராத்திரியை கொண்டாட ஈஷா மையத்திற்கு வருகை தந்தனர்.
சிவராத்திரி கொண்டாட்டம் துவங்கிய உடன் வழக்கம் போல் பாடல்கள் பாட ஆரம்பித்தன. அதனை கேட்டு சத்குரு ஆட்டம் போட ஆரம்பித்தார்.அவருடன் சேர்ந்து பக்தர்களும் செம ஆட்டம் போட்டனர்.
நடிகை காஜல் அகர்வாலும் இந்த ஆட்டத்தில் பங்கேற்றார். அப்போது அவர் சத்குருவை வணங்க, பதிலுக்கு ஆசிர்வாதம் பண்ணுவதாக கூறி காஜலுக்கு பஜக் என்று ஒரு முத்தம் கொடுத்தார் சத்குரு.
இதே போல் நடிகை தமன்னாவும் சத்குருவுடன் செமத்தியான ஆட்டம் போட்டார். இந்த வீடியோ தான் தற்போது சமூக வலைதளங்களில் வைரல் ஆகி வருகிறது.