ஐதராபாத்தில் அமைந்துள்ள சில்கூர் கோவில் தலைமை அர்ச்சகர் ரங்கராஜன் இந்துக் கடவுள்களுக்கு குடியுரிமை வழங்க வேண்டும் என கூறியிருக்கிறார்.
இந்து கடவுள்களுக்கு இந்திய குடியுரிமை கொடுக்க வேண்டும்..! கோவில் அர்ச்சகர் மத்திய அரசுக்கு கோரிக்கை! காரணம் என்ன தெரியுமா?

ஹைதராபாத்தில் உஸ்மான்சாகர் ஏரிக்கரை அருகில் சில்கூர் பாலாஜி திருக்கோயில் அமைந்துள்ளது. அந்த பகுதியில் இந்த கோயிலானது மிகவும் விசேஷம் பெற்றதாக விளங்கி வருகிறது அது மட்டும் இல்லாமல் வெளிநாடு செல்ல விரும்புபவர்கள் தங்களுக்கு விசா கிடைக்க வேண்டும் என்பதற்காக அவர்களுடைய பாஸ்போர்ட்டுகளை இந்த பெருமாளின் காலடியில் வைத்து வணங்கி செல்வது வழக்கமாக கொண்டுள்ளனர்.
ஒருவேளை விசா கிடைக்காமல் அவதிப்படுவோர் இவ்வாறாக பெருமாள் காலடியில் தங்களது பாஸ்போர்ட்டை வைத்து வணங்கினால் அவர்களுக்கு நிச்சயம் விசா கிடைக்கும் என்ற நம்பிக்கையோடு பக்தர்கள் இந்த கோவிலுக்கு வருவது வழக்கம் ஆகையால் இந்த கோயிலுக்கு விசா பெருமாள் எனவும் ஒரு பெயர் வழங்கப்பட்டு வருகிறது.
இந்நிலையில் பெருமாளுக்கு குடியுரிமை சட்டத்தின் கீழ் குடியுரிமை வழங்க வேண்டும் என்று சில்கூர் கோவில் தலைமை அர்ச்சகர் ரங்கராஜன் கூறியுள்ளார். கடவுள்கள் தங்களை பிரதிநிதித்துவம் செய்ய முடியாது. அறங்காவலர் ,அர்ச்சகர் ,நிர்வாக அதிகாரி போன்ற நட்பு நபர்களால் மட்டுமே பிரதிநிதித்துவம் செய்ய முடியும்.
ஆகவே ஐயப்பசாமி, திருப்பதி ஏழுமலையான், சில்கூர் பாலாஜி உள்ளிட்ட அனைத்து தெய்வங்களுக்கும் குடியுரிமை சட்டத்தின் கீழ் குடியுரிமை வழங்க வேண்டுமெனவும் சில்கூர் கோவில் தலைமை அர்ச்சகர் ரங்கராஜன் கூறியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. அதோடு மட்டுமல்லாமல் அனைத்து தெய்வங்களையும் குடிமக்களாக அரசு பதிவு செய்ய வேண்டும் எனவும் அவர் கூறியுள்ளார்.