காஞ்சி வீரன்ஸ் அணியை கதற வைத்து வென்ற சேப்பாக் சூப்பர் கில்லிஸ்!

சேப்பாக் சூப்பர் கில்லிஸ் அணி 61 ரன்கள் வித்தியாசத்தில் காஞ்சி வீரன்ஸ் அணியை வென்றுள்ளது .


முதலில் விளையாடிய சேப்பாக் சூப்பர் கில்லிஸ் அணி நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்களில் 3 விக்கெட் இழப்புக்கு 191 ரன்கள் குவித்தது.

அந்த அணியின் ஹரிஷ் குமார் 20 பந்துகளில் 53 ரன்களை குவித்தார்  .

பின்னர் களமிறங்கிய  காஞ்சி வீரன்ஸ் அணியினர் , சேப்பாக் சூப்பர் கில்லிஸ்  அணியின் பந்துவீச்சை சமாளிக்க முடியாமல் அடுத்தடுத்து விக்கெட்டுகளை பறிகொடுத்தனர் .இதனால் அந்த அணியால் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 130 ரன்கள் மட்டுமே எடுக்க முடிந்தது . 

 சேப்பாக் சூப்பர் கில்லிஸ்  ஹரிஷ் குமார்  சிறப்பாக பந்து வீசி 4 விக்கெட்களை வீழ்த்தி அந்த அணியின் வெற்றிக்கு வழிவகுத்தார் .