சென்னை என்றாலே நம் அனைவருக்கும் பல விஷயங்கள் மனதில் தோன்றும். அதில் எப்போதுமே முதன்மை வகிப்பது ஒன்று மெரினா கடற்கரை மற்றொன்று கூவம் நதி.
மெரீனா கடற்கரையும் , கூவம் நதியும் ! மெட்ராஸ் டே ஸ்பெஷல்!

வெளியூர்களில் இருந்து சென்னைக்கு வரும் மக்கள் முக்கியமாக சுற்றிப்பார்க்க வேண்டும் என நினைக்கும் இடம் தான் மெரினா கடற்கரை.
சென்னையின் மிகப்பெரிய அடையாளம் மெரினா கடற்கரை இதுதான் இந்தியாவிலேயே மிக நீளமான கடற்கரை என்ற பெருமைக்குரியது.
இக்கடற்கரையை ஒட்டி புகழ்பெற்றோரின் உருவச்சிலைகள், நினைவிடங்கள், சமாதிகள் அமைந்துள்ளதால் இது சென்னை நகரின் சுற்றுலா தலங்களில் ஒன்றாகவும் விளங்குகிறது .
கூவம் என்றவுடன் நம் அனைவருக்கும் நினைவில் வருவது அதன் நாற்றம். ஆனால் அது உண்மையில் எவ்வளவு சுத்தமான நதியாக இருந்தது என்று நம் அனைவருக்கும் தெரியாது.
மூக்கைப் பிடிக்காமல் கடக்கவே முடியாத ஒரு இடம்தான் கூவம். இதனை "கருப்பு ஆறு " என்றும் கூறுவர். ஆனால் இந்த ஆறு கடந்த 50 ஆண்டுகளுக்கு முன்பு எவ்வாறு இருந்தது என்பது நம் அனைவருக்கும் பிரம்மிக்க வைக்கும் ஒன்றாக இருக்கக்கூடும்.
அந்தக் காலத்தில் சென்னையில் இருந்த மக்களுக்கு கூவம் ஆறிலிருந்து கிடைக்கும் நீரில் தான் பயிர் செய்தனர் என்பதை நம்மால் நம்ப முடியுமா? காரணம் இன்று சென்னையில் பயிரும் இல்லை! கூவம் நதியின் தொன்மை நிலையும் இல்லை !
இந்த ஆற்றை மட்டும் நம் மக்களும் நல்லபடியாக காப்பாற்றி வந்திருந்தால் இன்று தண்ணீர் பஞ்சம் என்பதே சென்னைக்கு இல்லை. தற்போது சென்னையில் குடிநீர்ப் பஞ்சம் தலைவிரித்து ஆடுகிறது . ஒரு காலத்தில் கூவம் நதி நீர் தான் பல குடும்பங்களின் தண்ணீர் தாகத்தை தீர்த்து வைத்தது என்று சொன்னால் அதை உங்களால் நம்ப முடியுமா? இது மட்டுமா பயிர்கள் விளைச்சலுக்கும் பயன்படுத்தப்பட்டது கூவம் நதி நீர் தான். ஆனால் இன்றோ அது குப்பைகளை சுமக்கும் பாவப்பட்ட நீராய் மாறியுள்ளது .
கங்கை நதி மட்டும்தான் புனிதமான நீரா ?? கூவம் நதியும் ஒரு காலத்தில் புனிதமான நதி தான் . ஆனால் நம் மக்களின் அலட்சியத்தாலும் அக்கறையின்மையாளும் வருங்கால சந்ததியின் வாழ்க்கையைப் பற்றி யோசிக்காததாலும் உருவான "கருப்பு ஆறு " தான் இன்றைய கூவம் என்றே கூறவேண்டும் .