17 வயதில் 5 மாதம் கர்ப்பமான +2 மாணவி! கெமிஸ்ட்ரி வாத்தியாரால் நேர்ந்த விபரீதம்!

பன்னிரண்டாம் வகுப்பு மாணவியை வேதியியல் ஆய்வுக்கூடத்தில் மிரட்டி பாலியல் பலாத்காரம் செய்து கர்ப்பமாக்கிய ஆசிரியரை அப்பகுதி காவல்துறையினர் தேடி வருகின்றனர்.


சேலம் மாவட்டத்தில் உள்ள அரசு மேல்நிலைப்பள்ளியானது சேலம்-கோயம்பத்தூர் நெடுஞ்சாலையில் அமைந்துள்ளது. இங்கே உதவி தலைமை ஆசிரியராக பாலாஜி என்பவர் பணிபுரிந்து வருகிறார். இவர் பள்ளியில் மேல்நிலை வகுப்புகளின் வேதியியல் ஆசிரியராகவும் செயல்பட்டு வருகிறார். இந்நிலையில் சென்ற ஆண்டு அப்பள்ளியில் படித்த பன்னிரண்டாம் வகுப்பு மாணவி ஒருவர் தற்போது கர்ப்பமாகியுள்ளார். 

அந்த பெண்ணை பாலாஜி வேதியியல் ஆய்வு கூடத்திற்கு வரவழைத்து பலமுறை பாலியல் பலாத்காரம் செய்துள்ளார். அந்தப் பெண் ஐந்து மாத கர்ப்பிணியாக இருந்தபோது இந்த தகவலை பெற்றோரிடம் தெரிவித்துள்ளார். அவர்கள் கொண்டலாம்பட்டி காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். அங்கு பணியாற்றிய மகளிர் உதவி ஆய்வாளரான புஷ்பராணி என்பவர் இந்த வழக்கை நடத்தி வந்தார்.

அவர் உதவி தலைமையாசிரியர் மீது இருந்த வழக்கை ரத்து செய்யக்கோரி மாணவியின் குடும்பத்தினரிடம் கட்டப்பஞ்சாயத்து செய்துள்ளார். அதற்கு இழப்பீடாக ரூ 5 லட்சம் ரூபாய் தருவதாகவும் கூறியுள்ளார். மாணவி ஏழை குடும்பத்தை சேர்ந்தவர் என்பதால் பயந்து கொண்டு பாலாஜி மீது அளித்த புகாரை திரும்பப் பெற்றனர்.

இந்நிலையில் அதே வகுப்பில் படிக்கும் மற்றொரு மாணவி பாலிமர் நியூஸ் தொலைக்காட்சியில் தொடர்பு கொண்டு பேசியுள்ளார். அப்போது பாதிக்கப்பட்ட மாணவிக்கு நேர்ந்த இன்னல்களை பற்றி கூறியுள்ளார். இதனை பாலிமர் தொலைக்காட்சியானது மேலதிகாரி காவல்துறையினரிடம் தெரிவித்தது.

இதனையறிந்த காவல்துறை ஆணையர் நடவடிக்கை எடுக்க தொடங்கினார். பின்னர் குற்றச்சாட்டை உறுதி செய்த அவர், குற்றவாளிக்கு துணைபோக நினைத்த புஷ்பராணியை கைது செய்ய உத்தரவிட்டார். பின்னர் பள்ளிக்கு சென்று பாலாஜியை கைது செய்ய முயன்றனர். ஆனால் அவர், தலைமறைவாகிவிட்டார். 

இந்த சம்பவமானது சமூக வலைதளங்களில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.