பிரபல விமான நிறுவனத்தின் கழிவறையில் கேமராக்கள் மறைத்து வைக்கப்பட்டிருந்த சம்பவமானது அமெரிக்காவில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
விமான கழிவறையில் ரகசிய கேமரா! பெண்கள் பாத்ரூம் போவதை பார்த்து ரசித்த விபரீத பைலட்டுகள்! அதிர்ச்சி சம்பவம்!

அமெரிக்கா நாட்டில் இயங்கிவரும் விமான நிறுவனங்களில் "சவுத்வெஸ்ட்" நிறுவனம் புகழ்பெற்றதாகும். இந்த நிறுவனத்தில் பணியாற்றி வரும் 2 விமானிகள் கழிவறைகளில் கேமராவை மறைத்து வைத்துள்ளனர். இந்த சம்பவமானது 2017-ஆம் ஆண்டில் நடைபெற்றது. அமெரிக்கா நாட்டின் பிட்ஸ்பர்க் நகரிலிருந்து, ஃபீனிக்ஸ் மாகாணத்திற்கு செல்லும் விமானத்தில் இந்த செயலானது அரங்கேறியுள்ளது.
அந்த விமானத்தில் பயணம் செய்த ஸ்டெய்னேக்கர் என்ற பயணி தான் கழிவறையை உபயோகிக்கும் வீடியோ ஐ-பேடு ஒன்றில் வெளியாவதை கண்டு அதிர்ச்சி அடைந்தார். உடனடியாக அவர் இதுகுறித்து விமானத்தின் கேப்டன் டோனி கிரஹாமிடம் கூறியுள்ளார். கேமரா பொருத்தப்பட்டிருந்ததை ஒப்புக்கொண்ட டோனி கிரஹாம், பாதுகாப்பிற்காக பொருத்தப்பட்டதாக கூறி சமாளித்துள்ளார்.
2018-ஆம் ஆண்டின் தொடக்கத்தில் ஸ்டெய்னேக்கர் மற்றும் அவருடைய கணவர் சம்பவம் குறித்து ஃபீனிக்ஸ் மாகாணத்தில் வழக்குப்பதிவு செய்தனர். இந்த வழக்கை குறித்து விசாரணை நடத்திய நீதிபதிகள், "பயணிகளின் கவணத்தை திசைதிருப்பும் வகையில் எந்தவித செயல்களிலும் ஈடுபடக்கூடாது" என்று அறிவுறுத்தியுள்ளனர்.
இந்த சம்பவம் குறித்து பதிலளித்த சவுத்வெஸ்ட் நிறுவனம், "எங்களுடைய பயணிகளின் நம்பகத்தன்மையே எங்களுக்கு மிகவும் முக்கியமானதாகும். அவர்களின் பாதுகாப்பு எங்களுக்கு பிரதானமானதாகும். நாங்கள் எங்கள் கழிவறையில் எந்தவிதமான கேமராக்களையும் மறைத்து வைக்கவில்லை என்பது விசாரணையில் தெரியவரும். அதுவரை இந்த குற்றச்சாட்டு குறித்து கருத்து தெரிவிக்க எங்களுக்கு விருப்பமில்லை" என்று ஓரு அறிக்கையை வெளியிட்டுள்ளது.
இந்த சம்பவமானது அமெரிக்காவில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.