மும்பையை சேர்ந்த தொழில் அதிபர் விமானத்தில் ஆபாச படம் பார்த்ததாக அதை தனக்கு தெரியும்படி வைத்ததாகவும் அந்த விமானத்தில் பயணம் செய்த பெண் பயணி ஒருவர் போலீசாரிடம் புகார் அளித்துள்ளார்.
விமானத்தில் குழந்தையுடன் இருந்த பெண்ணுக்கு ஆபாச படம் காட்டிய தொழில் அதிபர்! பிறகு நேர்ந்த தரமான சம்பவம்!

விமானத்தில் வந்த அந்தப் பெண்மணி சென்னையில் உள்ள மடிப்பாக்கத்தை சேர்ந்தவர் அவர் தனது குழந்தையுடன் தனது கணவரை பார்க்க மும்பை சென்று வந்ததாக தெரிகிறது. சனிக்கிழமை இரவு 10.55 மணி அளவில் விமானம் மும்பையில் இருந்து கிளம்பி 12.50 மணியளவில் சென்னை வந்தடைந்தது.
கடந்த ஞாயிற்றுக்கிழமை அன்று சென்னை போலீசாரிடம் பெண் பயணி புகார் அளித்து அவரை கைது செய்யவும் வைத்துள்ளார் .போலீசாரிடம் அவர் கூறியதாவது தனது இருக்கையின் பக்கத்தில் அமர்ந்த மும்பையைச் சேர்ந்த தொழிலதிபர் சனிக்கிழமை இரவு தனது செல்போனில் ஆபாச படம் பார்த்துக் கொண்டு வந்ததாக கூறியுள்ளார்.
மேலும் ஆபாச படத்தை குழந்தையுடன் வந்த தனக்கு தெரியும் படி செல்போனை வைத்ததாகவும் பெண் பயணி கூறியுள்ளார். பல முறை எச்சரித்தும் தொழில் அதிபர் ஆபாச படம் செல்போனில் பார்த்து வந்ததாகவும் கூறியுள்ளார்.
அந்தப் பெண்மணி விமானத்தின் பணிப் பெண்ணிடம் புகார் அளித்த நிலையில் விமானத்தின் கேப்டன் வந்து அந்தப் பணியை வேறு இருக்கைக்கு மாறி அமரும்படி கூறினார். பின்னர் விமானம் சென்னை வந்தது அந்த தொழிலதிபர் விமான நிலைய காவல்துறையிடம் ஒப்படைக்கப்பட்டார். பின்னர் அவர்கள் அவரிடம் எழுத்துப்பூர்வமாக குற்றத்தை ஒப்புக்கொள்ளும்படி அவரிடமிருந்து பெற்றனர்.
அதன் அடிப்படையில் அவர் கைது செய்யப்பட்டார். இந்த விவகாரம் காரணமாக சென்னை விமான நிலையத்தில் சிறிது நேரம் பதற்றம் நிலவியது. அதனைத் தொடர்ந்து பின்னர் சகஜ நிலைக்கு திரும்பியது.