ரக்ஷா பந்தன் விழா இந்த வருடம் ஆகஸ்ட் மாதம் 15ம் தேதி கொண்டாடப்பட உள்ளது . பொதுவாக ரக்ஷாபந்தன் விழாவானது சகோதர சகோதரிகளின் அன்பையும் பாசத்தையும் வெளிப்படுத்தும் விழாவாக அமைந்துள்ளது . தமிழ் சினிமாவில் சகோதர சகோதரிகளின் அன்பை மையமாகக் கொண்டு பல்வேறு திரைப்பட பாடல்கள் வெளிவந்துள்ளது . அவற்றை பற்றி இனி நாம் காண்போம் .
அண்ணன் தங்கை பாசத்தை வெளிப்படுத்தும் தமிழ் திரைப்பட பாடல்கள்! ரக்ஷாபந்தன் ஸ்பெஷல்

பாசமலர் திரைப்படத்தில் மலர்ந்தும் மலராத என்ற பாடல் அண்ணன் தங்கை பாசத்தை வெளிப்படுத்தும் பாடலாக இன்றைய அளவிலும் தமிழ் சினிமாவில் விளங்குகிறது .
ரெக்க திரைப்படத்தில் இடம்பெறும் கண்ணம்மா கண்ணம்மா பாடல் அக்கா மற்றும் தம்பிக்கு இடையேயான பாசத்தை வித்தியாசமான முறையில் வெளிப்படுத்தும் விதமாக அமைந்து ரசிகர்களின் வரவேற்பை பெற்றது .
மேயாத மான் திரைப்படத்தில் இடம்பெறும் அனபெல்லா பேய் வரா பாடல் ரசிகர்களின் மிகப்பெரிய வரவேற்பை பெற்றது . நடிகர் வைபவ் மற்றும் நடிகை இந்துஜா இவர்களின் நடனம் இந்த பாடலுக்கு மிகப்பெரிய வலிமை சேர்த்தது .
காதலுக்கு மரியாதை திரைப்படத்தில் இடம்பெறும் ஆனந்த குயிலின் பாட்டு என்ற பாடல் அண்ணன் தங்கை பாசத்தை வெளிப்படுத்தும் பாடலாக அமைந்தது . இந்த படத்தில் நடிகை ஷாலினிக்கு அண்ணனாக ராதாரவி மற்றும் தலைவாசல் விஜய் ஆகியோர் நடித்து இருப்பார்கள் .
சமுத்திரம் திரைப்படத்தில் இடம்பெறும் அழகான சின்ன தேவதை பாடல் மிகப் பெரிய ஹிட்டானது . இந்த திரைப்படத்தில் சரத்குமார் ,முரளி, மனோஜ் பாரதிராஜா ஆகியோர்கள் நடிகை காவேரிக்கு அண்ணன்களாக நடித்துிருப்பார்கள்.