இயக்குனர் அட்லி இயக்கத்தில் நடிகர் விஜய் நடிப்பில் பிகில் திரைப்படம் வரும் வெள்ளிக்கிழமை உலக அளவில் திரையரங்குகளில் வெளியாகவுள்ளது.
பிகில் படத்தை நாங்க போடமாட்டோம்..! சென்னையின் பிரபல திரையரங்கம் திடீர் அறிவிப்பு..! அதிர்ச்சி காரணம்!

பிகில் திரைப்படம் ரிலீசுக்கு இன்னும் சில நாட்களே உள்ளதால் படத்திற்கான டிக்கெட் முன்பதிவும் தொடங்கிவிட்டது. இந்நிலையில் சென்னையில் உள்ள பிரபல திரையரங்குகளில் ஒன்றான போரூர் GK சினிமாஸ் பிகில் திரைப்படத்தை திரையிடப் போவதில்லை என அறிவித்துள்ளது.
வினியோகஸ்தர்கள் உடன் ஒப்பந்தம் ஏற்படாத காரணத்தினால் பிகில் திரைப்படத்தை திரையிடப் போவதில்லை என போரூர் GK சினிமாஸ் அறிவித்துள்ளது. இதனால் போரூர் GK சினிமாஸில் கார்த்தி நடிப்பில் தீபாவளிக்கு வெளிவரவிருக்கும் கைதி திரைப்படம் மட்டுமே வெளியிடப்படும் எனவும் அவர்கள் அறிவித்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.
இதனால் அப்பகுதியில் உள்ள விஜய் ரசிகர்கள் பெரும் அதிர்ச்சியில் ஆழ்ந்துள்ளனர்.