காதல் முறிவுக்கு பிறகு பிக்பாஸ் தர்ஷன் காதலி எடுத்த திடீர் முடிவு! தீயாய் பரவும் வீடியோ!

சனம் ஷெட்டி தன்னுடைய காதலரான பிக்பாஸ் தர்ஷனுக்கு பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்து ஆச்சரியப்படுத்தியுள்ளார்.


பிக்பாஸ் 3-வது சீசன் விறுவிறுப்பான கட்டத்தை அடைந்துள்ளது. போட்டியாளர்களின் நெருக்கமானவர்கள் ஒருவர் பிக்பாஸ் வீட்டுக்குள் சென்று அவர்களுடன் மகிழ்ச்சியாக உரையாடி வருவது போன்ற சம்பவங்கள் அரங்கேறின. கவினின் தோழர் உள்ளே சென்று அவர் செய்த தவறுகளை சுட்டிக்காட்டி கன்னத்தில் அறைந்த சம்பவமானது பொதுமக்களை கலங்க வைத்தது.

இதனிடையே பிக்பாஸ் வீட்டில் எல்லோருக்கும் செல்லப்பிள்ளையாக இருப்பவர் தர்ஷன். சில வாரங்களுக்கு முன்னர் இவருக்கும் ஷெரீனுக்குமிடையே காதல் மலர்வதாக வனிதா ஒரு குண்டை தூக்கிப்போட்டார். இது தர்ஷனின் காதலியான சனம் ஷெட்டியை பெரிதளவில் பாதித்தது. உடனடியாக அவர் சமூக வலைத்தளத்தில் தர்ஷினி விட்டுப் பிரிந்து செல்வது போன்று ஒரு வீடியோவை பதிவு செய்திருந்தார்.

இன்று தர்ஷனின் பிறந்தநாளாகும். இதற்கு சமூக வலைத்தளங்களில் சனம் ஷெட்டி தர்ஷனின் பிறந்தநாளை வெகு விமர்சையாக பதிவேற்றங்களின் மூலம் கொண்டாடி வருகிறார். மேலும் தர்ஷன் வெற்றி பெற தன்னுடைய பரிபூரண வாழ்த்துக்களையும் தெரிவித்துள்ளார்

பிரேக்கப் அளவிற்கு சென்ற சனம் ஷெட்டி திடீரென்று தர்ஷனுக்கு வாழ்த்துக்கள் தெரிவிப்பது பொதுமக்களே குழப்பமடைய வைத்துள்ளது.