காட்டுப்பகுதியில் காலையில் பிச்சைக்காரராகவும் இரவு நேரத்தில் பெண்களுடன் ஜாலியாக இருப்பவருமான சுற்றித்திரிந்தவரை காவல்துறையினர் கைது செய்திருக்கும் சம்பவமானது அத்திரமலையில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
பகலில் பிச்சைக்காரன்! இரவில் பல பெண்களுடன் உல்லாசம்! போலீசாரையே அதிர வைத்த சம்பவம்!

நெல்லை மாவட்டத்தில் உள்ள மேற்கு தொடர்ச்சி மலையின் அடிவாரத்தில் அத்திரி மலை என்னும் பகுதி அமைந்துள்ளது. இப்பகுதியில் கோரக்கநாதர் கோவில் ஒன்று அமைந்துள்ளது.இந்த கோவிலுக்கு செல்வதற்காக மக்கள் அப்பகுதியில் உள்ள கல்லாற்றை கடந்து செல்வர்.
கரையோரத்தில் நீண்ட காலமாக இரவு நேரத்தில் குடிசை அமைந்திருப்பதை கண்ட காவல்துறையினர் அவ்விடத்திற்கு சென்றனர். அங்கு சுப்பிரமணி என்பவர் வசித்து வந்தார். அவ்விடத்தில் தங்கக்கூடாது என்று கூறி காவல்துறையினர் அவரை எச்சரித்து சென்றனர்.
இருப்பினும் சுப்ரமணி அவ்விடத்திலிருந்து அகன்று செல்லவில்லை. பல நாட்களாக அவ்விடத்தில் சுப்ரமணி நடனமாடிக்கொண்டே இருந்ததால் காவல்துறையினர் அவரை கண்காணித்தனர். அப்போது அவர் காலையில் பிச்சைக்காரன் போல் வேடமிட்டு கோவிலுக்கு வருபவர்களிடமிருந்து யாசகம் பெறுவது போலும், அந்தப் பணத்தை வைத்துக் கொண்டு லஞ்சம் வாங்குவதும், மது குடிப்பதும் என வாழ்ந்து வந்துள்ளார்.
சில நேரம் பெண்களை அழைத்து வந்த குடிசையில் உறவு வைத்து கொள்வதையும் வழக்கமாக கொண்டுள்ளார். இது போன்ற தகாத செயல்களில் அவர் 5 வருடங்களாக ஈடுபட்டு வந்துள்ளார் என்பதை காவல்துறையினர் கண்டறிந்துள்ளனர். இந்த சம்பவமானது கோரக்கநாதர் கோவில் பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.