மீண்டும் பேனர் கலாச்சாரம் தொடங்கியுள்ளது அனைவருக்கும் அதிர்ச்சியை அளித்துள்ளது என்று சுபஸ்ரீயின் தாயார் வேதனை தெரிவித்துள்ளார்.
தமிழக அரசு துரோகம் செய்துவிட்டது! கதறிய சுபஸ்ரீ தாய்! ஏன் தெரியுமா?

சில வாரங்களுக்கு முன்னர் பேனர் விடிந்து சுபஸ்ரீ என்ற இளம் பெண் தடுமாறியதால் அவர் மீது லாரி ஏறி உயிரிழந்தார். இதற்கு காரணமான அதிமுகவை சேர்ந்த ராஜகோபால் என்பவர் சில நாட்களுக்கு முன்னர் கைது செய்யப்பட்டார். இந்நிலையில் இனி பேனர்கள் வைக்க மாட்டோம் என்று திமுக உட்பட பல கட்சிகள் உச்ச நீதிமன்றத்தில் பிரமாண பத்திரத்தை தாக்கல் செய்தன.
இன்னும் சில நாட்களில் மாமல்லபுரத்தில் பிரதமர் மோடி மற்றும் சீன அதிபரின் சந்திப்பு நிகழ போகிறது. இந்த சந்திப்பின்போது தமிழக அரசு சார்பில் பேனர் வைக்க வேண்டும் என்று அதிமுக உயர்நீதிமன்றத்தில் கோரிக்கை விடுத்திருந்தது. உயர்நீதிமன்றமும் இந்த கோரிக்கைக்கு அனுமதி அளித்துள்ளது.
இந்த செய்தியை அறிந்த சுபஸ்ரீயின் தாயார், கடும் வேதனை அடைந்துள்ளார். "தமிழக அரசின் இந்த முடிவால் மீண்டும் பேனர் கலாச்சாரம் தொடங்குவதற்கான வாய்ப்புகள் அதிகரித்துள்ளன. அதேபோன்று சுபஸ்ரீ இறந்து இன்னும் நாட்கள் குறையவில்லை.
இந்நிலையில் பிரதமரை வரவேற்பதற்கு பேனர் மட்டும்தான் வழியா? வேறு வழிகளில் பிரதமரை வரவேற்க வாய்ப்பு இல்லையா?. என் மகளுக்கு நேர்ந்த நிலைமை வேறு யாருக்கும் நேர்ந்து விடக்கூடாது என்பதற்காக கூறுகிறேன்" என்று அழுதுக்கொண்டே கூறினார்.
இந்த கெட்டியானது தமிழக அரசின் மீது மக்களுக்கு பெரும் அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது.