மகாராஷ்டிராவில் அஜித் பவார் மீது இருந்த 9 ஊழல் வழக்குகளையும் உடனடியாக தள்ளிவிட்டது புதிதாக தேர்வு செய்யப்பட்ட தேவேந்திர பட்னாவிஸின் அரசு.
ஊழலை ஒழிப்பதில் பா.ஜ.க.தான் டாப்! அமித் ஷா செயலைக் கண்டு அதிரும் ராகுல் காந்தி!

ஆம், அஜித் பவார் மீது வழக்குகளைப் போட்டதும் பா.ஜ.க.தான், அதில் இருந்து விடுதலை செய்திருப்பதும் அதே பா.ஜ.க.தான். பாஜகவின் தேவேந்திர பட்னவிஸ் முதல்வராகப் பொறுப்பேற்பதற்கு உதவியவர் தேசியவாத காங்கிரஸ் கட்சியைச்சார்ந்த மூத்த தலைவர் அஜித் பவார் என்பது உலகிற்கே தெரியும்.
அவர்தான் இரவோடு இரவாக திடீரென பாஜக ஆட்சி அமைக்க ஆதரவு அளித்தார். அதற்காகத்தான் அஜித் பவாருக்கு துணை முதல்வர் பதவி வழங்கப்பட்டது.
அஜித் பவார் மீது 70 ஆயிரம் கோடி ரூபாய் ஊழல் குற்றச்சாட்டு இருக்கும் நிலையில், அத்தனை வழக்குகளையும் பா.ஜ.க. தள்ளுபடி செய்திருக்கிறது.ஆம், 2013ஆம் ஆண்டு பதிவு செய்யப்பட்ட இந்த வழக்குகள் அனைத்திலும் அவருக்குத் தொடர்பு இல்லை எனக் கூறி மாநில ஊழல் தடுப்புப் பிரிவு அந்த வழக்குகளை முடித்துவைத்துள்ளது.
இதே போன்று நாடு முழுவதும் உள்ள ஊழல்வாதிகளை பா.ஜ.க.வில் சேர்த்து, ஊழலை இந்தியாவில் இருந்து ஒட்டுமொத்தமாக ஒழித்துக்கட்ட அமித் ஷா திட்டம் போட்டிருக்கிறாராம். அமித் ஷாவின் இந்த அதிரடியைக் கண்டு ராகுல் உள்ளிட்ட அத்தனை எதிர்க் கட்சிகளும் அதிர்ந்து நிற்கின்றன.