சுர்ஜித் மரணத்திற்கு காரணம் அவன் தாய் தான்! பிரபல நடிகை வெளியிட்ட அதிர்ச்சி தகவல்!

சுர்ஜித்தின் தாயாரை பிரபல பிக்பாஸ் நடிகை திட்டியுள்ள சம்பவமானது சமூக வலைத்தளங்களில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.


திருச்சி மாவட்டத்தில் மணப்பாறை எனுமிடம் அமைந்துள்ளது. இங்கு நடுக்காட்டுப்பட்டி எனும் கிராமம் அமைந்துள்ளது. இந்த கிராமத்தில் ஆழ்துளை கிணறு அமைந்துள்ளது.  இந்த கிணற்றுக்கு அருகே விளையாடி கொண்டிருந்த 2 வயது குழந்தை சுர்ஜித் தவறி விழுந்தது. காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து குழந்தையை மீட்கும் பணியில் ஈடுபட்டனர்.

பின்னர் தீயணைப்பு படையினரும் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்தனர். 30 அடி ஆழத்தில் விழுந்த குழந்தை, தற்போது 100 அடி ஆழத்தை எட்டியுள்ளது. தொடர்ந்து 90 மணி நேரமாக மீட்புப்பணிகள் நடைபெற்று வருகின்றன.

இதனிடையே பிரபல நடன இயக்குநரும், பிக்பாஸ் புகழுமான காயத்ரி ரகுராம் சுஜித் இன் பெற்றோரில் திட்டி உள்ளது சமூக வலைத்தளங்களில் பல அதிர்வுகளை ஏற்படுத்தியுள்ளது. அவர் தன்னுடைய ட்விட்டர் பக்கத்தில், "இந்த சம்பவமானது முதல் முறையோ அல்லது கடைசி முறையோ அல்ல. இது மீண்டும் மீண்டும் நிகழும் விபத்தாக அமைந்துள்ளது.

விழுந்த குழந்தையை காப்பதற்கு அரசிடம் போதிய கருவிகள் இல்லாதது மிகுந்த மன வேதனை அளிக்கிறது. இருப்பினும் அந்த கிணற்றை மூடாமல் வைத்திருந்தது பெற்றோரின் அலட்சியப்போக்காகும். இந்த விபத்துக்கு பெரியவர்கள் தான் காரணம். சுர்ஜித் மீண்டு வர இறைவனை பிரார்த்திக்கிறேன்" என்று பதிவிட்டிருந்தார்.

இவருடைய கருத்திற்கு சிலர் வரவேற்பு அளித்திருந்தாலும் பலருக்கு இது எரிச்சலை ஏற்படுத்தியிருந்தது. "ஒரு தாய், தன்னுடைய குழந்தையை 3 நாட்களாகும் பறிகொடுத்துவிட்டு அழுது கொண்டிருக்கும் போது இப்படி பேசலாமா. என்ன இருந்தாலும் அந்தத் தாயின் வலியானது இன்னொரு தாய்க்கு தான் தெரியவரும்" என்று சிலர் பதில் அளித்திருந்தனர்.

அதற்கு காயத்ரி ரகுராம் பதிலளிக்கையில், "அவர் படும் துயரங்களை அறிந்துகொள்வதற்கு நான் ஒரு தாயாக இருக்க வேண்டிய அவசியமில்லை. அதற்கு மனிதம் போதும். இந்த தவறுகள் தொடர்ந்து நிகழ்ந்து கொண்டே இருப்பதற்கு யார் காரணம். அரசினால் ஒரு யந்திரத்தினை தயார் செய்ய இயலவில்லை என்பது வருத்தமளிக்கும் செய்தி ஒன்றுதான்,

இருப்பினும் அலட்சியப் போக்கால் செயல்படுபவர்களை திருத்துவதற்கும் ஒரு இயந்திரத்தை கண்டு பிடித்தால் நன்றாக இருக்கும்" என்று பதிவிட்டிருந்தார். இந்த சம்பவமானது ட்விட்டர் வலைப்பக்கத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.