மாஸ் காட்டிய ஸ்மித்! பதுங்கி பாய்ந்து தெறிக்கவிட்ட ஷமி! சேசிங்கில் சாதிக்குமா இந்திய அணி?

இந்தியா மற்றும் ஆஸ்திரேலியா அணிகளுக்கு இடையிலான மூன்றாவது ஒருநாள் போட்டியில் முதலில் பேட்டிங் செய்த ஆஸ்திரேலிய அணி நிர்ணயிக்கப்பட்ட 50 ஓவர்களில் 286 ரன்களை எடுத்துள்ளது.


டாஸ் வென்ற ஆஸ்திரேலிய அணி பேட்டிங்கை தேர்வு செய்தது. தொடக்க ஆட்டக்காரராக களமிறங்கிய டேவிட் வார்னர் மற்றும் பின்ச் ஆகியோர் நிலைத்து நின்று ஆடாமல் தங்களது விக்கெட்டுகளை பறிகொடுத்தனர். அந்த அணியின் ஸ்டீவ் ஸ்மித் மட்டும் சிறப்பாக ஆடி அந்த அணியின் ஸ்கோரை மளமளவென உயர்த்தினார். தொடர்ந்து சிறப்பாக ஆடிய ஸ்மித் 131 ரன்கள் குவித்து ஆட்டமிழந்தார். 

அவர் ஆட்டமிழந்த பிறகு ஆஸ்திரேலிய அணி ரன்களை குவிக்க முடியாமல் திணறினர். அவர்கள் இந்திய அணியின் பந்துவீச்சை சமாளிக்க முடியாமல் அடுத்தடுத்து விக்கெட்டுகளை பறிகொடுத்தனர். இதனால் ஆஸ்திரேலிய அணி நிர்ணயிக்கப்பட்ட 50 ஓவர்களில் 9 விக்கெட்டுக்கு 286 ரன்களை எடுத்தது. 

இந்திய அணியின் வேகப்பந்து வீச்சாளர் ஷமி சிறப்பாக பந்துவீசி 4 விக்கெட்டுகளை வீழ்த்தினார். ரவீந்திர ஜடேஜா 2 விக்கெட்களை வீழ்த்தினார் . இந்த போட்டியில் வெற்றி பெறும் அணி கோப்பையை கைப்பற்றும் என்பதால் இரண்டாம் பாதியில் விறுவிறுப்புக்கு பஞ்சம் இருக்காது என்பது குறிப்பிடத்தக்கது.