அரசு மருத்துவமனைகளில் பணியாற்றும் டாக்டர்களுக்கு சூப்பர் ஸ்பெஷாலிட்டி கல்வி பெற 50 சதவிகித இட ஒதுக்கீடு வழங்கிட சமூகநீதிக்கு எதிராக உச்சநீதிமன்றம் அளித்த தீர்ப்பு அதிர்ச்சிக்குரியது. தமிழ்நாடு அரசு காணப்போகும் தீர்வு என்ன என்பதை நாடே எதிர்பார்க்கிறது என்று திராவிடர் கழகத் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி கேள்வி எழுப்பியிருக்கிறார்.
தமிழ்நாடு அரசு மருத்துவமனைகளில் பணியாற்றும் டாக்டர்களுக்கு சூப்பர் ஸ்பெஷாலிட்டிகளில் இட ஒதுக்கீடு கிடையாதா..? ஆவேசத்தில் கி.வீரமணி

இன்று வெளிவந்துள்ள உச்சநீதிமன்றத்தின் 50 சதவிகித சூப்பர் ஸ்பெஷாலிட்டி பற்றிய தமிழ்நாடு அரசு மருத்துவமனைகளில் பணிபுரியும் டாக்டர்களுக்கு இட ஒதுக்கீடு தீர்ப்பு மிகவும் ஏமாற்றமளிக்கக் கூடிய தீர்ப்பு! இவ்வாண்டே செயல்படுத்தப்படவேண்டும் என்று இருந்தும் - கைக்கெட்டியது வாய்க்கெட்டவிடாமல் செய்யும் தீர்ப்பு - சமூகநீதியை உச்சநீதிமன்றம் காப்பாற்றும் என்ற நம்பிக்கையைத் தகர்க்கும் தீர்ப்பு ஆகும்.
மக்கள் மன்றத்தை நம்புவதைத் தவிர இனி வேறு வழியேயில்லை. தமிழக அரசு இதற்கு எப்படித் தீர்வு காணப் போகிறது?
இது மக்கள் மன்றத்தின் முன் உள்ள முக்கிய கேள்வியாகும்! புதிய வியூகங்களை வகுத்து, தமிழ்நாட்டு டாக்டர்களுக்கு சூப்பர் ஸ்பெஷாலிட்டி இடங்கள் 50 சதவிகிதம் கிடைக்க வழி வகை காண முன்வருமா? என்று கேட்டுக்கொண்டுள்ளார்.