சேலம் மாவட்டம் எடப்பாடி அருகே டேங்கர் லாரி ஒன்று தனியார் ஆலைக்கு சொந்தமான பேருந்து மீது மோதியதில் 40 தொழிலாளர்கள் காயமுற்றனர்.
பழுதாகி நின்ற லாரி..! அது தெரியாமல் வேகமாக வந்த பஸ்..! நொடியில் நேர்ந்த கோரம்..! 40 பயணிகள் நிலை..? எடப்பாடி அதிர்ச்சி! என்னாச்சு?

சேலம் மாவட்டம் எடப்பாடி சுற்று வட்டாரத்தை சேர்ந்த 52 தொழிலாளர்கள் ஈரோடு பெருந்துறையில் உள்ள பனியன் கம்பெனிக்கு வேலைக்கு சென்றுவிட்டு வீடு திரும்பி கொண்டிருந்தனர். அவர்கள் சென்ற பேருந்தை ஓட்டுநர் ரவிச்சந்திரன் இயக்கினார். இந்நிலையில் சங்ககிரி சாலையில் மாதேஸ்வரன் கோவில் பேருந்து நிறுத்தம் அருகே ஒரு டேங்கர் லாரி பழுதாகி நின்று கொண்டு இருந்தது. அந்த லாரி மீது இரவு 8 மணி அளவில் தொழிலாளர்களை ஏற்றி வந்த பேருந்து எதிர்பாராத விதமாக பயங்கரமாக மோதியது. இதில் பேருந்தின் முன்பக்கம் சேதம் அடைந்தது.
மேலும் இடிபாடுகளுக்குள் சிக்கி பேருந்தில் வந்த தொழிலாளர்கள் காயம் அடைந்தனர். நாச்சிபாளையம் செல்வி, ஹேமா, நங்கவள்ளி திவ்யா, ராஜேஸ்வரி, கோகிலா, வெள்ளர்நாயக்கன்பாளையம் யுவராஜ், கிருஷ்ணகுமார், வெடிக்காரன்பாளையம் விக்னேஷ் உள்பட 40 தொழிலாளர்கள் காயம் அடைந்தனர். காயம் அடைந்தவர்களிர்ல 20 பேர் எடப்பாடி அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டனர். மற்றவர்கள் அந்த பகுதியில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர்.
அங்கு அவர்களுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இந்த விபத்து குறித்து எடப்பாடி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.