தீபாவளி என்றாலே அதிகாலையில் எழுந்து எண்ணெய் தேய்த்து குளித்து விட்டு சரசரவென சரவெடிகளை வெடித்து கொண்டாடுவது வழக்கம்.
குபேர பூஜையின் பலன்கள் ! தீபாவளி ஸ்பெஷல்

எப்பொழுதுமே தீபாவளியன்று சூரிய உதயத்துக்கு முன்பாக கங்கா ஸ்நானம் செய்துவிட்டு பட்டாசுகளை வெடித்து இனிப்புகள் பரிமாறி கொண்டாடி வருவோம். இது மட்டுமில்லாமல் மேலும் ஒரு பூஜையையும் நாம் தீபாவளியன்று கட்டாயம் கடைபிடிக்க வேண்டும். அது வேறு ஒன்றுமில்லை லட்சுமி குபேரர் வழிபாடுதான்.
இந்த லட்சுமி குபேர பூஜையும் தீபாவளியின் அடையாளமாக நம் புராணங்களில் கூறப்பட்டுள்ளது. இந்த பூஜையை நான் செய்யவும் நாம் செய்வதன் மூலம் இல்லங்களில் சகல சௌபாக்கியங்களும் நிறைந்து லட்சுமி வாசம் செய்வாள் என்பது ஐதீகம். பூஜையை எவ்வாறு மேற்கொள்ளலாம் என்பதை காணலாம். இந்த பூஜையை மேற்கொள்வதற்கான எல்லா முன்னேற்பாடுகளையும் தீபாவளிக்கு முன்னால் செய்து வைத்திருக்க வேண்டும். தீபாவளி அன்று சூரிய உதயத்திற்கு முன் எழுந்து வங்காளம் மேற்கொண்டுவிட்டு லட்சுமி குபேர பூஜையை செய்வது வழக்கம். பூஜையறையில் லட்சுமி குபேரர் படம் அல்லது குபேர எந்திரம் ஆகியவற்றை வைத்து அதற்கு முன் ஒரு தலைவாழை இலையை வைத்து அதில் பழவகைகளும் இனிப்பு வகைகளையும் படைத்து நிவேதனம் செய்ய வேண்டும். பின்பு முழு முதற்கடவுளான பிள்ளையாரை மஞ்சளில் பிடித்து வைத்து அவருக்கு அலங்காரம் செய்து முதலில் கணபதி வழிபாடு செய்து முடித்தல் வேண்டும். அதனைத் தொடர்ந்து குபேர நாமங்களை துதித்து அவ்வாறு குபேர நாமங்களை பற்றி தெரியாதோர் குபேரன் நமஹ என்ற மந்திரத்தை கூறி மலர்களால் அர்ச்சனை செய்து பூஜிக்க வேண்டும்.
மேற்கூறியவாறு செய்து வந்தால் வீட்டில் சகல சௌபாக்கியங்களும் நிறைந்து லட்சுமி வாசம் செய்வாள். இது மட்டுமின்றி குடும்பங்களில் ஏற்படும் கஷ்டங்களிலிருந்து விலகி கடன் தொல்லைகளில் இருந்தும் வெளியேற இந்த பூஜை நமக்கு உதவி புரியும். ஆகவே இந்த குபேர பூஜையை நாம் அனைவரும் மேற்கொண்டு நம் இல்லத்தில் சகல சௌபாக்கியங்களும் செல்வங்களும் நிறைந்து வாழ்வோமாக.