என் கார் டிரைவர் ரொம்ப மோசம்..! இப்படிப்பட்டவர் என தெரியாது! ரித்விகா வெளியிட்ட ஷாக் தகவல்!

தமிழ் திரையுலகில் துணை நடிகையாக வலம் வந்து ரசிகர்களின் நெஞ்சங்களைக் கொள்ளை கொண்டவர் நடிகை ரித்விகா.


இயக்குனர் பாலா இயக்கத்தில் வெளியான பரதேசி திரைப்படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானவர் நடிகை ரித்விகா. இதனைத் தொடர்ந்து இயக்குனர் ரஞ்சித்தின் இயக்கத்தில் வெளியான மெட்ராஸ் திரைப்படத்தில் மேரி என்ற கதாபாத்திரத்தை ஏற்று நடித்திருந்தார்.

தன்னுடைய சிறப்பான நடிப்பை வெளிப்படுத்தி அதன் மூலம் சிறந்த துணை நடிகைக்கான விருதையும் தட்டிச் சென்றார். இதேபோல் சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்த் நடிப்பில் வெளியான கபாலி திரைப்படத்தில் முக்கியமான கதாபாத்திரத்தில் நடித்திருந்தார். 

இதனைத் தொடர்ந்து பிரபல தொலைக்காட்சி ஒன்று ஒளிபரப்பாகிக் கொண்டிருந்த பிக் பாஸ் சீசன் 2 நிகழ்ச்சியில் போட்டியாளராக பங்கேற்று அதன் டைட்டில் வின்னர் ஆகவும் உருவெடுத்தார். இதன் மூலம் மிகவும் பிரபலமான நடிகையாக வலம் வர ஆரம்பித்தார். இந்நிலையில் நடிகை ரித்விகா தன்னுடைய ட்விட்டர் பக்கத்தில் ஊபர் நிறுவனத்தின் கார் ஓட்டுநரான ஜெய்னுலாப்தீன் என்பவர் மீது புகார் கூறி பதிவு ஒன்றை தன்னுடைய ட்விட்டர் பக்கத்தில் ரித்விகா வெளியிட்டுள்ளார்.

மேலும் அந்த புகாரில் மிகவும் பாதுகாப்பற்ற முறையில் பயணம் செய்ததாகவும் ஓட்டுனர் மிகவும் ராஷ் டிரைவிங் செய்ததாகவும் குறிப்பிட்டிருக்கிறார். மேலும் வண்டியின் எண் TN07AR4798 மற்றும் காரின் பெயர் டாட்டா இன்டிகா என்றும் குறிப்பிட்டுள்ளார். இதற்கு பதிலளித்த உபர் நிறுவனம் ஓட்டுநர் மீது உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்று கூறியுள்ளார். 

தற்போது நடிகை ரித்விகா, "இரண்டாம் உலகப் போரின் கடைசி குண்டு" என்ற திரைப்படத்தில் பிஸியாக நடித்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.