சிந்துசமவெளியில் என்னை தான் முதலில் கேட்டாங்க..! தவறவிட்டுவிட்டேன்! இளம் நடிகை இப்போது கவலை!

சமீபத்தில் வெளியான மகாமுனி திரைப்படம் திரையரங்குகளில் வெற்றிகரமாக ஓடிக்கொண்டிருக்கிறது.


இந்நிலையில் மகாமுனி திரைப்படத்தில் முன்னணி கதாபாத்திரத்தில் நடித்த மஹிமா சமீபத்தில் பேட்டி ஒன்றில் பங்கேற்று இருக்கிறார் . அப்போது பேசிய அவர் தனக்கு திரைப்படத்தில் ஏற்பட்ட அனுபவங்களைப் பற்றி பகிர்ந்து கொண்டுள்ளார். முதன் முதலில் தமிழ் சினிமாவில் பள்ளி சீருடையில் சாட்டை திரைப்படத்தின் மூலம் அறிமுகமானவர் நடிகை மஹிமா. 

மகாமுனி திரைப்படத்தில் பெமினிஸ்ட் ரோலில் நடித்திருந்த மஹிமாவை பார்த்த ரசிகர்கள் அனைவரும் பள்ளி சீருடையில் நடித்த மஹிமாவா இது ? என்று ஆச்சரியத்தில் கேள்வி எழுப்புகின்றனர். தற்போது எந்த ரோல் கொடுத்தாலும் என்னால் நடிக்க முடியும் என்ற ஒரு நம்பிக்கை, இந்த மகா முனி திரைப்படம் எனக்கு அளித்திருக்கிறது என்று பெருமையாக கூறுகிறார் நடிகை மஹிமா நம்பியார் . 

எந்த சினிமா பின்புலமும் இல்லாத குடும்பத்தில் இருந்து எப்படி நீங்கள் சினிமா துறைக்கு வந்தீர்கள் ? என்று கேள்வி எழுப்பப்பட்டது அதற்கு பதிலளித்த அவர் சிறு வயதில் இருந்தே எனக்கு சினிமா மீது ஆர்வம் இருந்தது. கண்ணாடி முன்னால் நின்று கொண்டு நானே நடித்து பார்பேன் . திடீரென்று எனக்கு சினிமாவில் நடிக்கும் ஒரு நல்ல வாய்ப்பு அமைந்தது அதன்படிதான் சாட்டை திரைப்படத்தின் மூலம் தமிழ் திரையுலகில் கால் பதித்தேன் என்று கூறினார் 

சாட்டை திரைப்படத்தில் நடிப்பதற்கு முன்பு, சிந்து சமவெளி திரைப்படத்தில் சிஸ்டர் ரோலில் நடிப்பதற்காக என்னை அழைத்தார்கள் . ஆனால் அப்போது நான் பள்ளிப் படிப்பை விட்டு என்னால் அந்த திரைப்படத்தில் நடிக்க இயலாது என்று கூறிவிட்டு அதற்குப் பின்புதான் சாட்டை திரைப்படத்தில் நடிக்கும் வாய்ப்பைப் பெற்றேன் என்று கூறினார் நடிகை மஹிமா. சாட்டை திரைப்படத்தின் மூலம் தமிழ் சினிமாவை கற்றுக்கொண்டது மட்டுமல்லாமல் தமிழில் எழுதப் படிக்கவும் கற்றுக் கொண்டேன் என்று பெருமையாக கூறினார்.