தமிழ் சினிமாவில் கடந்த 2006 ஆம் ஆண்டு வெளிவந்த கேடி திரைப்படத்தின் மூலம் அறிமுகமானார்.
பிரபல நடிகைக்கு இப்படி ஒரு வியாதியா? ஒரு நாளைக்கு 12 மாத்திரைகள் சாப்பிடும் பரிதாபம்! என்ன ஆச்சு தெரியுமா?

இதனைத் தொடர்ந்து பெரிதாக தமிழ் சினிமாவில் நாட்டம் காட்டாத இலியானா தளபதி விஜய் நடிப்பில் இயக்குனர் சங்கர் இயக்கத்தில் வெளியான நண்பன் திரைப்படத்தில் கதாநாயகியாக நடித்திருந்தார்.
தமிழைப் போலவே தெலுங்கு , ஹிந்தி திரைப்படங்களிலும் முன்னணி கதாநாயகியாக வலம் வந்தவர் நடிகை இலியானா. இவர் கடந்த சில காலமாகவே ஆஸ்திரேலியா நாட்டை சேர்ந்த ஒருவரை தீவிரமாக காதலித்து வந்தார். இருவரும் அவ்வப்போது ஒன்றாக இணைந்து செல்லும் புகைப்படம் மற்றும் வீடியோக்கள் சமூக வலைத்தளத்தில் வைரலாக பரவி வந்தது.
இந்நிலையில் இலியானாவுக்கும் அவரது காதலருக்கும் இடையே ஏற்பட்ட மனக்கசப்பு காரணமாக இருவரும் ஒருவரையொருவர் பிரிந்து விட்டனர். இவர்களது பிரேக்கப் விவகாரம் ரசிகர்கள் மத்தியில் சற்று அதிர்ச்சியை ஏற்படுத்தியது.
இலியானாவின் காதல் பிரேக்அப்-ஐ அடுத்து அவர் சமூகவலைத்தளங்களில் இருந்து விலகியிருந்தார். தற்போது தன்னுடைய காதலரின் பிரிவுக்கான காரணத்தை முதல் முதலில் பேட்டி ஒன்றில் பகிர்ந்து உள்ளார். தன் காதலரை விட்டு பிரிந்ததால் இலியானா மிகவும் மன அழுத்தத்துக்கு உள்ளானதாகவும் அந்த பேட்டியில் கூறியிருக்கிறார்.
இந்த பிரிவின் சோகத்தை தாங்க முடியாமல் திரைப்படங்களின் நடிப்பதையே தற்போதைக்கு கைவிட்டு இருப்பதாகவும் அவர் கூறியிருந்தார். மேலும் தனக்கு ஏற்பட்ட மன அழுத்தத்தால் உடல்நலக்குறைவு ஏற்பட்டு சிகிச்சையில் இருந்து வந்ததாகவும் நடிகை இலியானா கூறினார்.
மேலும் வாரந்தோறும் சிகிச்சைக்காக மருத்துவமனைக்கு சென்று வருவதால் படங்களில் நடிப்பதை கூட ஒத்தி வைத்திருப்பதாகவும் அவர் கூறியிருந்தது குறிப்பிடத்தக்கது. உடல்நலக்குறைவால் சில சமயங்களில் ஒரு நாளைக்கு 12 மாத்திரைகள் சாப்பிட்டு வந்ததாக நடிகை இலியானா சோகத்துடன் கூறினார்.
இவ்வாறாக இருப்பதால் உடல் எடையும் அதிகமாக கூடி விட்டதாகவும் அவர் வருத்தப்பட்டிருக்கிறார். உடல் எடையை குறைப்பதற்காக ஜிம்முக்கு சென்று விட்டு வெளியே வரும்போது அந்த புகைப்படங்களை எடுத்து சமூக வலைத்தளத்தில் பலர் பதிவிடுகிறார்கள். இதனாலேயே நான் ஜிம்முக்கு செல்வதையும் தவிர்த்து வருகிறேன் என்று கூறியிருந்தார்.