எனது உடல்.. எனது உரிமை.. ஆகையால் எதைவேண்டுமானாலும் காட்டுவேன் என்று பிரபல நடிகை அஞ்சலி அமீர் நெட்டிசன்களுக்கு பதிலளித்திருக்கிறார்.
எனது உடல்..! எனது உரிமை..! எதை வேண்டுமானாலும் காட்டுவேன்..! புகைப்படம் வெளியிட்டு நடிகை அஞ்சலி அமீர் பளார்..பளார்..! யாருக்கு தெரியுமா?

இயக்குனர் ராம் அவர்களின் இயக்கத்தில் உருவான பேரன்பு திரைப்படத்தின் மூலமாக தமிழ் சினிமாவில் நாயகியாக அறிமுகமானவர் திருநங்கை அஞ்சலி அமீர். இயக்குனர் ராம், கற்றது தமிழ், தங்கமீன்கள், தரமணி ஆகிய திரைப்படங்களுக்கு அடுத்து இயக்கிய திரைப்படம் பேரன்பு ஆகும். இந்த திரைப்படத்தில் மலையாளத் திரையுலகில் முன்னணி நடிகராக வலம் வரும் மம்முட்டி, அஞ்சலி அமீர் உள்ளிட்டோர் நடித்துள்ளனர். இந்த திரைப்படத்தில் அஞ்சலியை இயக்குனர் ராம் இருக்கு அறிமுகம் செய்து வைத்தது நடிகர் மம்முட்டி தான் என்று கூறப்பட்டது.
இந்த திரைப்படம் மூலமாக தமிழ் ரசிகர்களுக்கு பரிட்சயமான நடிகையாக அஞ்சலி அமீர் மாறினார். இவர் எப்போதுமே சமூக வலைதளங்களில் ஆக்டிவாக இருக்கும் நடிகை ஆவார். எப்பொழுதும் தன்னுடைய சமூக வலைதள பக்கங்களில் புது புது போட்டோ ஷூட் களை நடத்தி அப்போது எடுக்கப்பட்ட புகைப்படங்களை பகிர்ந்து கொள்வதை வழக்கமாகக் கொண்டிருக்கிறார். அந்த வகையில் தற்போது நடிகை அஞ்சலி அமீர் புதிதாக எடுக்கப்பட்ட புகைப்படங்களை தன்னுடைய சமூக வலைத்தள பக்கத்தில் பகிர்ந்திருக்கிறார்.
அதாவது நடிகை அஞ்சலி வெளியிட்டுள்ள அந்த புகைப்படத்தில், நீர்வீழ்ச்சிக்கு அடியில் மிகவும் கவர்ச்சிகரமாக உள்ளாடை மட்டும் அணிந்து கொண்டு போஸ் அளித்திருக்கிறார். இதனை பார்த்த நெட்டிசன்கள் ஒரு சிலர் இத்தகைய கவர்ச்சி தேவையா? என்று கேள்வி எழுப்பியுள்ளனர். இதற்கு நடிகை அஞ்சலி அமீர், என் உடம்பு.. என் உரிமை.. நான் எதை வேண்டும் என்றாலும் காட்டுவேன் என்று பதிலளித்திருக்கிறார். நடிகை அஞ்சலி அவர் வெளியிட்டுள்ள இந்த பதிவு வலைத்தளத்தில் வைரலாக பரவி வருகிறது.