நான் பணம் கொடுப்பது நோயாளிக்கு தெரியக்கூடாது! நடிகர் அஜித் செய்யும் சீக்ரெட் உதவி! உண்மையை வெளியிட்ட பிரபல டாக்டர்!

படப்பிடிப்புகள் இல்லாத நேரத்தில் நடிகர் அஜித்குமார் தனது நண்பர் டாக்டர் விஜயசங்கர் உடன் நேரம் செலவிடுவதை வழக்கமாகக் கொண்டுள்ளார்.


எம்ஜிஆர், சிவாஜி நடித்த காலங்களில் கதாநாயகனாக நடித்து பிரபலமடைந்தவர் நடிகர் ஜெய்சங்கர் ஆவார் . ஜெய்சங்கர் உயிரோடு இருந்த காலத்தில் ஏழை எளிய மக்களுக்காக பல்வேறு இலவச கண் சிகிச்சை முகாம்களை நடத்தி உள்ளார் . 

தமிழ் சினிமாவில் முன்னணி  கதாநாயகனாக இருந்தாலும் நடிகர் ஜெய்சங்கர் தனது மகனை சினிமாவில் நடிக்க வைக்காமல் , அவரது மகனை கண் டாக்டருக்கு படிக்க வைத்தார் .

தற்போது உலக புகழ் பெற்ற கண் டாக்டராக இருந்து வரும் நடிகர் ஜெய்சங்கரின் மகன் விஜய் சங்கர் நடிகர் அஜித்துக்கு நெருங்கிய நண்பர் ஆவார்.படப்பிடிப்புகள் இல்லாத நேரத்தில் நடிகர் அஜித்குமார் தனது நண்பர் டாக்டர் விஜயசங்கர் உடன் நேரம் செலவிடுவதை வழக்கமாகக் கொண்டுள்ளார்.

டாக்டர் விஜய் சங்கரிடம் சிகிச்சை பெற வரும் நோயாளிகள் ஆபரேஷன் செய்வதற்கு பணம் இல்லாமல் இருந்தால் அவர்களை திருப்பி அனுப்பி விடாதீர்கள் . அவர்கள் ஆபரேஷனுக்கு தேவைப்படும் மொத்த பணத்தையும் நானே கொடுக்கிறேன். இது குறித்து என்னிடம் எதுவும் கேட்க வேண்டாம். நீங்களே மொத்த முடிவு எடுத்துக் கொள்ளலாம். மேலும் நான் தான் உதவி செய்கிறேன் என்று அவர்களுக்கு  எக்காரணம் கொண்டும் தெரியவே கூடாது என்று நண்பர் விஜயசங்கர் இடம் கட்டளை போட்டிருக்கிறாராம் நடிகர் அஜித்குமார் .