ஆட்டத்தை ஆரம்பித்த அம்பன் புயல்..! ஓடிக்கொண்டிருந்த பேருந்தை அப்படியே அடித்து தூக்கிய வேகம்..!

ஆம்பன் புயலின் வலிமை பேருந்தை பிடித்து பின்னால் இழுக்கும் வீடியோவானது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.


2 நாட்களுக்கு முன்னர் ஆம்பன் புயல், உருவானதாக இந்திய வானிலை ஆராய்ச்சி மையம் தகவல் வெளியிட்டது. இந்த புயல் வங்கத்தின் டிகா-வங்கதேசத்தின் ஹாதியா தீவுகளுக்கு இடையே சென்னையின் கிழக்கு திசையில் 650 கிலோ மீட்டர் தொலைவில் மையம் கொண்டுள்ளதாக கூறப்படுகிறது.

இந்த புயலானது தமிழகத்தை தாக்குவதற்கு வாய்ப்பே இல்லை என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்து விட்டது. அதுமட்டுமின்றி இந்த புயல் சென்னை அருகே கரையைக் கடக்கும் எந்தவித வாய்ப்பும் இல்லை என்று கூறப்பட்டுள்ளது.

இந்த புயலானது இன்று தன்னுடைய நிலையை உருமாற்றியுள்ளது. இந்த புயல் தற்போது வடக்கு நோக்கி செல்கிறது. ஆதலால் தன்னுடைய வலிமையினால் அரபிக்கடலில் வீசப்படும் காற்று இழுத்து செல்கிறது. வங்கக்கடலில் உள்ள காற்று எடுக்கப்படுவதால் உள்மாவட்டங்களில் மழை பெய்து வருகிறது.

குறிப்பாக கர்நாடகா, தெலுங்கானா, ஒரிசா ஆகிய மாநிலங்களில் கடுமையான மழை மற்றும் சூறாவளி காற்று வீசி வருகிறது. மேலும் தெலங்கானாவில் ஓடிக்கொண்டிருந்த சொகுசு பேருந்து ஒன்று சூறாவளி காற்று தன் வலிமையினால் பின்னோக்கி இழுத்த வீடியோவானது தற்போது சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.

இந்த புயலின் தாக்கமானது தற்போது தெலங்கானா மற்றும் ஒரிசா ஆகிய மாநிலங்களில் இந்த புயலானது பெரும் பாதிப்பை ஏற்படுத்தும் என்று கூறப்படுகிறது. இந்த வீடியோவானது சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.